Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...
வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.
வாழைப்பழம் ஆரோக்கியம் மிகுந்தது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் வீட்டில் வாழைக்காய் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடுவோம். வாழைக்காய் பஜ்ஜிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் வாயுத் தொல்லை ஏற்படும் என்று ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.

பாட்டி வைத்தியம்
தீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கும் அற்புதமாக இந்த வாழைத்தண்டு, நம்முடைய பாரம்பரிய மருத்துவமான பாட்டி வைத்திய முறையில் பயன்படுத்தப்படுகிறது. அப்படி என்னென்ன நோய்களைத் தீர்க்க வாழைத்தண்டை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
நார்ச்சத்து
வாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
சிறுநீர் கடுப்பு
சரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
ஏராளமான பயன்கள்
நரம்புத் தளர்ச்சியை சரிசெய்யும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு.
தினந்தோறும் வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தீர்கள் என்றால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் குணமாகும்.
அடிக்கடி தாகம் எடுப்பவர்கள் வாழைத்தண்டை இடித்து சாறெடுத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை இருப்பவர்கள் வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
விஷ கடிகள்
பாம்பு கடித்தாலோ அல்லது விஷப் பூச்சகள் ஏதாவது தீண்டிவிட்டாலோ உடனே அந்த இடத்தை விஷம் ஏறாமல் இருகு்க கீறி விடுவார்கள். அதன்பின், அந்த இடத்தில் வாழைத்தண்டு சாறை தடவி விட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் முறிந்துவிடும்.
தீக்காயங்கள்
தீக்காயங்கள் வெகு நாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.
கடுக்காயும் வாழைச்சாறும்
வாழைச்சாறுடன் கொஞ்சம் கடுக்காயை சேர்த்து கலந்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், மூலநோய் ஆகிய பிரச்னைகள் தீரும்.
வாழைப்பூ சாறு
கை, கால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
வாழைச்சாறு கடும் துவர்ப்புச் சுவையுடையது தான். அப்படியே குடித்தால் முழு பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கொடுப்பதானால் வெல்லமோ அல்லது பனை வெல்லமோ கலந்து கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications