Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா?
வாய்ப்புண்ணுக்கு பாட்டி வைத்தியத்துல இவ்ளோ மருநு்து இருக்கா? ட்ரை பண்ணி பார்க்கலாமே...
அல்சர் நாம் நினைப்பது போல ஒன்று அல்ல. அதற்குள் பல வகைகள் இருக்கின்றன. அதை பாட்டி வைத்தியத்துல எப்படி சரி பண்ணலாம்.
மௌத் அல்சர் என்பது ஒரு கடுமையான வாய் புண் இது பொதுவாக இடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவந்த புண்ணாக ஏற்பட்டு இருக்கும். இது பொதுவாக நாக்கு, உதடு, ஈறுகளில் அல்லது கன்னத்தின் உள்பக்கம் ஏற்படும்.

இதனால் எரிச்சல் வலி மற்றும் உணவு சாப்பிடுவதிலும் சிரமம் இருக்கும். சாதாரணமாக அது ஒரு வாய் புண் சரியாக 7 முதல் 10 நாட்களுக்கு எடுக்கும். இது சிறிய வடிவிலும் ஏற்படலாம் பெரிய வடிவிலும் ஏற்படலாம்.

பாட்டி வைத்திய முறை
இந்த வாய்ப்புண்ணை ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டு மேலும், புண்ணாக்கிக் கொள்ளாமல், வீட்டிலுள்ள பொருள்களை வைத்து பாட்டி வைத்திய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேங்காய் பால்
தேங்காய்ப்பால் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அதில் வாய்ப்புண்ணையும் ஆற்றும் சக்தி மிக அதிகமாகவே உள்ளது. தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.

ஜில்- ஹாட் வாட்டர்
ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும்.

வெந்தயக் கீரை
2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும்.

தனியா விதை
1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றவும்.

தக்காளி சாறு
பச்சை தக்காளி சாப்பிடுவது வாய் புண்களை அகற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு 3-4 முறை தக்காளி பழச்சாறு கொண்டு வாய் கொப்புளிக்கவும். அதேபோல ஒரு நாளைக்கு 3-4 முறை பச்சை தக்காளி அல்லது தக்காளிச்சாறு சாப்பிடவும். இது வாய் புண்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியம்.

மஞ்சள் பொடி
1 தேக்கரண்டி கிளிசரைனில் மஞ்சள் பொடி சேர்த்து அதை பேஸ்டை அப்ளை செய்யவும். தண்ணீரில் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து அது வெதுவெதுப்பான பிறகு வாய் கொப்பிளிக்கவும்.

துளசி
5-6 துளசி இலையை மென்று சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடிக்கவும். வாய் புண் ஏற்படும் போதெல்லாம் இதை 5-6 முறை செய்யவும்.

கற்பூரம்
கற்பூரம் மற்றும் கற்கண்டு கலவையை அப்ளை செய்து வர மௌத் அல்சர் சீக்ரம் குணமடையும். கற்கண்டை உடைத்துப் போட்டால் காற்றின் ஈரப்பதத்தில் அது கரைய ஆரம்பித்து விடும். அதில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து வாய்ப்புண்ணில் தடவ சீக்கிரம் குணமடையும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் மற்றும் தயிர் காலையில் சாப்பிடுங்கள். சூடான மற்றும் காரமான உணவை உண்ணாமல் தவிர்க்கவும். அதேபோல மதிய வேளையில் வாழைப்பழத்தோடு சிறிது தயிர் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமடையும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலவையுடன் ஈறுகளை மசாஜ் செய்யவும். வாய் புண்களுக்கு நிரூபிக்கப்பட்ட வீட்டு வைத்தியத்தில் இது ஒன்றாகும்.

நெல்லிக்காய்
பெரிய நெல்லிக்காய் எனப்படும் இந்தியன் கூஸ் பெர்ரியை பேஸ்ட் செய்து அதை மௌத் அல்சரில் நேரடியாக அப்ளை செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை அது புண்களை எவ்வாறு குணப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்.

கசகசா
கசகசாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு
அல்சர் சரியாகும் வரை டீ அல்லது காபீ குடிப்பதை நிறுத்தவும்.
காரமான, எண்ணையுடைய, மற்றும் கொழுப்புடைய உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பித்தம் இல்லாத பப்பாளி பழம் சாப்பிடுவது மௌத் அல்சர்க்கு மிகவும் நல்லது.
வாய் புண் தவிர்க்க உணவு சாப்பிடும் போது தயிர் மற்றும் மோர் எடுத்துகொள்ளவும்.
வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் வழக்கமான உட்கொள்ளும் போது வாய் புண் தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications











