For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா?... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...

வாயில் இருந்து வரும் கெட்ட துர்நாற்றத்தைப் போக்க நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு. அவற்றை கடைபிடித்தாலே இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

By Vivek Sivanandam
|

நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் சந்தித்தும் ஆரோக்யம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிக முக்கியமானது வாய் துர்நாற்றம். இப்பிரச்சினை நம்மை மட்டுமில்லாமல் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மற்றவர்கள் நம் அருகில் வரவே பயப்படுவார்கள். உணவு பழக்கவழக்கம், பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது, புகைப்பிடித்தல் மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது என பலவித காரணங்களால் வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுகிறது.

இதை தவிர்த்து மருத்துவ ரீதியாக சுவாசக்குழாய் பாதிப்பு, நிமோனியா, ப்ராங்கைட்டிஸ் சர்க்கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறு போன்றவற்றாலும் வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.

patti vaithiyam for mouth odur in tamil

செய்யும் தவறுகள்

இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையை போக்க அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை முதலில் பார்ப்போம்.

* அன்றாடம் காலை, மாலை என இருவேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும்.

* உணவருந்திய பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

* புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் கடைபிடித்த பின்பும் வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்தித்து வந்தால், நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் கூறியுள்ள படியும், நம் பாட்டிகளின் கை வைத்தியத்தின் படியும் இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என இங்கே காணலாம்.

கிராம்பு

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை மென்று வாயில் அடக்குவது போல கிராம்பையும் மென்று வாயில் அடக்கிக்கொண்டால் வாய் துர்நாற்றம் விலகும்.

புதினா

சிறிதளவு நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) இரண்டையும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

எலுமிச்சை

வாய் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயிலிட்டு கொப்பளிக்க வேண்டும்.

வெண்டைக்காய்

வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய் சேர்த்த மோர் குழம்பையும் வாரத்தில் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொழுப்பை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லிக் கீரையை நன்கு கழுவி சாறாக்கி தொடர்ந்து அருந்தினால் காய்ச்சல் நேரத்தில் உடல் குளிர்ச்சியைப் பெறும். வாய் நாற்றமும் அகலும். கொத்தமல்லிக் காபி அருந்தினாலும் வாய் நாற்றம் அகன்று விடும்.

பட்டை

எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேனுடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். இந்ந நீரை பயன்படுத்தி தினமும் சிலமுறை வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுதும் நீங்கும்.

ஏலக்காய்

வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்பதற்காக பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்க புத்தணர்ச்சி ஏற்படும். ஏலக்காயை தேநீரில் கலந்தும் குடித்துவரலாம்.

பேக்கிங் சோடா

வாய் துர்நாற்றத்திற்கு பேக்கிங் சோடா சிறந்த வைத்தியமாக இருக்கிறது. வெந்நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து வாய் கொப்பளித்து வந்தால், வாயின் அமிலத்ததன்மையில் மாற்றம் ஏற்பட்டு, துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஓடிவிடும்.

பாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?

சூர்யகாந்தி விதை

உணவருந்திய பின்னர் சூரியகாந்தி விதைகளை மென்று பின்னர் ஒரு டம்ளர் நீர் அருந்தினால் வாய் துர்நாற்றம் ஓடோடிவிடும்.

அன்னாசிப்பழம்

தினமும் அன்னாசிப்பழ சாறு அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.

English summary

வாய் துர்நாற்றத்தைப் போக்க பாட்டி வைத்தியம் | patti vaithiyam tips for mouth odur

bad breath can make a big difference to your oral hygiene over time, when used in conjunction. first drinking enough water.
Story first published: Tuesday, July 17, 2018, 11:46 [IST]
Desktop Bottom Promotion