For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பித்தம் ஜாஸ்தியாகிடுச்சா? அதை குறைப்பதற்கான பாட்டி வைத்தியம் இதோ...

அதிகப்படியான பித்தத்தை போக்குவதற்கு பாட்டி வைத்தியத்தில் என்ன மருந்து இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்.

|

பித்தநீர் ஒரு விதமான கசப்பு சுவையுடையது. இது பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக இருக்கும். இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீர் தான் சிறுகுடலில் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

உணவுகள் கல்லீரலில் சேமிக்கப்பட்டு சிறு குடலின் முற்பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது. நமது கல்லீரல் 85% தண்ணீர், 10% பித்த உப்பு, 3% மியூக்கஸ் திரவம் மற்றும் நிறமிகள், 1% கொழுப்பு மற்றும் 0.7% கனிம உப்புகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட கல்லீரலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கல்லீரல் பாதிப்பை சரி செய்து கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க சில பாட்டி வைத்தியங்கள் உதவுகின்றன. அவற்றை பற்றி இப்பொழுது காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளைவுகள்

விளைவுகள்

பித்தநீர் பச்சை மஞ்சள் நிறம் கலந்த நீர் இது தான் நமது உணவுகளை செரிக்க உதவுகிறது. நமது உடலில் உள்ள இறந்த இரத்த சிவப்பணுக்களையும், நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தபையில் சேகரிக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சிறிது கொழுப்புகள் ஒரு சிக்னலை ஏற்படுத்தி பித்தப்பை யிலிருந்து பித்த நீரை விடுவிக்கிறது. அப்படியே இந்த பித்த நீர் இரண்டு சிறிய குழாய்கள் வழியாக சிறுகுடலின் மேற்பகுதியை அடைகிறது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்

  • அடிவயிற்றின் வலது மேற்பரப்பில் வலி
  • கருப்பு நிற சிறுநீர்
  • காய்ச்சல்
  • அரிப்பு
  • மஞ்சள் காமாலை
  • கண்டறிதல்
  • பரிசோதனைகள்

    பரிசோதனைகள்

    கல்லீரல் பாதிப்பை கண்காணிக்க அடிவயிற்று பகுதியில் சோதனை செய்வார்கள். அடிவயிற்று பகுதியின் மென்மை, வீக்கம் மற்றும் நீர் தேக்கம் இவற்றை கண்காணிப்பார்கள். சருமத்தின் நிறம் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி போன்றவற்றை பரிசோதித்து மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை பரிசோதிப்பார்கள். கல்லீரல் பாதிப்பை கண்டறிய லேப் டெஸ்ட், ஸ்கேன் பரிசோதனைகள், போன்றவற்றை மேற்கொள்வார்கள்.

    கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க பாட்டி வைத்தியம்

    கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க பாட்டி வைத்தியம்

    தேவையான பொருட்கள்

    • கொய்யாப்பழம்
    • லெமன் ஜூஸ்
    • மிளகு
    • கொய்யாபழம்
    • கொய்யாபழம்

      கொய்யாபழம்

      கொய்யாபழம் நமது உடலுக்கு மிகச் சிறந்த பழமாகும். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஆற்றுவதற்கு பயன்படுகிறது. இது காலரா, சளி மற்றும் மூச்சுப் பிரச்சினை போக்க பயன்படுகிறது. இது சரும பிரச்சினைகள், தொற்றுகள், பற்சொத்தை, வயிறு உப்புசம், பித்தநீர் பிரச்சினை, ஸ்கார்லெட் காய்ச்சல், காயங்கள், யோனி இரத்த போக்கு, லேசான காய்ச்சல், நீர்ச்சத்துயின்மை போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

      லெமன் ஜூஸ்

      லெமன் ஜூஸ்

      லெமன் ஜூஸ் பித்தப்பையில் உள்ள பித்த கற்களை போக்க பயன்படுகிறது. மேலும் பித்தபையில் ஏற்பட்டுள்ள அடைப்பை போக்குகிறது. 1/4 கப் லெமன் ஜூஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் கலக்காமல் குடித்து வர வேண்டும்.

      மிளகு

      மிளகு

      மற்ற காய்கறிகளைக் காட்டிலும் மிளகில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. ஒரு தம்மா துண்டு மிளகில் 95 மில்லிகிராம் அளவிற்கு விட்டமின் சி உள்ளது. பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 35 மில்லி கிராம் அளவு விட்டமின் சி தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் இரண்டு மூணு மிளகை போட்டு மெல்லுங்கள் போதும்.

      ஜூஸ்

      ஜூஸ்

      பழுத்த கொய்யாபழம், லெமன் ஜூஸ் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். நீண்ட காலம் வளமுடன் வாழலாம். ஏதாவது பழச்சாறுகளை அருந்துவதை வடவும் மேலே பரிந்து செய்யப்பட்டிருக்கும் பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பித்தத்தைக் குறைக்க பாட்டி வைத்தியம் | Patti vaithiyam tips for Biles pitham

Here we prescribed some natuaral patti vaithiyam remedies for pitham.
Desktop Bottom Promotion