For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்... இதோ உங்களுக்காக...

நம்மில் பெரும்பாலானோர் எதற்கு பயப்படுகிறோமோ இல்லையோ அடிக்கடி வரும் இருமலுக்கு கண்டிப்பாக அஞ்சி நடுங்குவோம். என்னதான் மருத்துகள் சாப்பிட்டாலும் இருமல் உடனடியாக நிற்க அவை என்ன மாய மந்திரமா செய்யும். உடல

By Vivek Sivanandam
|

நம்மில் பெரும்பாலானோர் எதற்கு பயப்படுகிறோமோ இல்லையோ அடிக்கடி வரும் இருமலுக்கு கண்டிப்பாக அஞ்சி நடுங்குவோம். இருமலுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு சென்றால் வருடத்தில் பாதி நாள் மருத்துவ சுற்றுலா தான் செல்ல வேண்டும். சொத்தில் பாதியும் கையோடு கொண்டு செல்லதான் வேண்டும். என்னதான் மருத்துகள் சாப்பிட்டாலும் இருமல் உடனடியாக நிற்க அவை என்ன மாய மந்திரமா செய்யும்.

patti vaithiyam for dry cough in tamil

நோய் எதிர்ப்பு சக்தி

உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்க சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக இருமலை நிறுத்த வேண்டுமென ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றை தொடர்ந்து அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வறட்டு இருமல்

வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்தவும் நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை சித்த வைத்தியங்கள் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.

பால் - முட்டை

பாலை அடுப்பில் வைத்து நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு கலக்கிய பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள். சிறிது நேரம் கழித்து பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் வராமல் போய்விடும். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்.

கொள்ளு சூப்

சிறிதளவு கொள்ளு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மிளகு, புண்டு மற்றும் சுக்கு மூன்றையும் பொடி செய்து கொள்ளவும்.

பின் தேவையான அளவு தண்ணீரில் இருவித பொடிகளையும் சேர்த்து
சிறிது உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இரண்டு நாள் தொடர்ந்து இம்மருந்தை சற்று சுடாக குடித்து வந்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் வந்த வழியே ஓடிவிடும்.

தேன்

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் சிறிதளவு சுத்தமான தேனை ஒரு தேக்கரண்டி எடுத்து அப்படியே சாப்பிடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் தலை தெறிக்க ஓடிவிடும். கசப்பான மருத்துகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து நன்கு பலனளிக்கும்.

இருமல் சற்று தீவிரமாக இருந்தால், இந்த விரிவான மருந்தை முயற்சி செய்து பார்க்கலாம். சிறிதளவு தேனுடன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து சாப்பிடலாம். இருமலும், சளியும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

உலர் திராட்சை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் பொருள் உலர் திராட்சை. உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் விரைவில் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால் இந்த மருந்தை தாராளமாக கொடுக்கலாம்.

புதினா

வறட்டு இருமலுக்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.

வெங்காயம்

சின்ன வெங்காயம் சிறிதளவு எடுத்து அதில் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த மருந்தை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் வந்தவழி திரும்பி போகும்.

பனங்கற்கண்டு

நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து மூன்று நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் வராமலே போகும்.

இஞ்சி

இருமல் உடனே குணமாக வேண்டுமெனில் சிறிய இஞ்சி துண்டு ஒன்றில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி இலை சேர்த்து மென்றால் போதும். இருமல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.

பூண்டு

பூண்டுப் பல் சிலவற்றை நெய்யில் நன்கு வதக்கி அதை அம்மியில் வைத்து நசுக்கி சூப்பிலோ அல்லது குழம்பிலோ போட்டு சூடு ஆறுவதற்கு முன்பு சாப்பிட்டால் இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.

English summary

வறட்டு இருமலுக்கு பாட்டி வைத்தியம் - patti vaithiyam tips for dry cough

A Dry cough is caused by viral infection. Mostly dry cough affects children. Those who have affected by a Dry cough be coughing with slightly high unnatural sound.
Story first published: Saturday, July 14, 2018, 15:42 [IST]
Desktop Bottom Promotion