For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொண்டை வலியால் அவஸ்தைப்படறீங்களா?... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...

தொண்டை கரகரப்பு என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தொல்லை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

By Vivek Sivanandam
|

தொண்டை கரகரப்பு என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தொல்லை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பொதுவாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கு சளி பிடிப்பதுடன் தொண்டை வலியும் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பும் வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததாலும் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி ஏற்படக்கூடும். தொண்டை கட்டிக்கொண்டால் சில நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடியாமல் தவித்துப்போய் விடுவோம். என்ன தான் ' இந்த மாத்திரையை சாப்பிடுங்க கிச் கிச் நீக்கிடுங்க' என்று விளம்பரம் செய்தாலும், நமது பாரம்பரிய பாட்டி வைத்தியத்தின் மூலம் கிடைக்கும் உடனடி தீர்வு வேறு எதிலும் கிடைக்காது அல்லவா? இதோ நம் பாட்டிகள் சொல்லித்தந்து விட்டு போன தொண்டை கரகரப்பிற்கான கை வைத்தியங்களை இங்கே காணலாம்.

patti vaithiyam tips for sore thorat in tamil

திரிபலா சூரணம்

நாட்டுமருத்துகடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த கலவை ) சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அந்நீரை சிறிது ஆறவிட்டு பின்னர் தொண்டையில் படும்படி வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பு நீங்கும்.

எலுமிச்சை - தேன்

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.

திரிகடுகம்

திரிகடுகம் என அழைக்கப்படும் சுக்கி, மிளகு, திப்பிலி மூன்றையும் வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.

உப்பு

வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிதளவு சேர்த்து தொண்டையில் படும்படு அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா?... இருக்கவே இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...

வசம்பு

சிறிதளவு வசம்பை எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

துளசி - கற்பூரவல்லி இலை

தொண்டை வலி போக, துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.

இஞ்சி

தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு அருமருந்தாக இருக்கிறது. இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்தால், சில நிமிடங்களில் தொண்டை கரகரப்பு சரியாவதுடன் புத்துணர்சியும் கிடைக்கும்.

தயிர்

தயிர் உடலுக்கு அதிக குளர்ச்சி தரும் பொருள் என்பதால் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்ப நிலையில் வைத்து தயிரை சாப்பிட்டால் தொண்டை பிரச்சனை சரியாகும்.

ஏலரிசி

சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு விரைவில் குணமாகும்.

அதிமதுரத்துண்டு

அதிமதுரத்துண்டு ஒன்றை வாயில் வைத்துக்கொண்டிருந்தால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அந்த உமிழ்நீரை விழங்கினால் தொண்டை கரகரப்பு உடனடியாக நீங்கவதுடன் தொண்டையில் கட்டியுள்ள சளியும் கரைந்து விடும்.

தேநீர்

பால் இல்லாமல் தேநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு ஓடிவிடும்.

முந்திரிப்பழம்

முந்திரிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சற்று தள்ளியே நிற்கும்.

வல்லாரை

வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

அரசமரப்பட்டை

அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் வெட்டி வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து பொடி செய்து, சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.

English summary

தொண்டை கரகரப்பை போக்க பாட்டி வைத்தியங்கள் | paati vaithiyam tips for sore thorat

A sore throat refers to pain, itchiness, or irritation of the throat. Throat pain is the primary symptom of a sore throat.
Desktop Bottom Promotion