For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் வலியை குணப்படுத்த சாப்பிட வேண்டியவை

நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சுவலியுடன் இருக்கும்போது மூச்சை உள்ளிழுப்பதும் சரி வெளிவிடுவதும் சரி மிக கடினமாய் இருக்க

By Saranraj
|

உங்களின் நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சுவலியுடன் இருக்கும்போது மூச்சை உள்ளிழுப்பதும் சரி வெளிவிடுவதும் சரி மிக கடினமாய் இருக்கும். பிளேரிசி என்பது உங்கள் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கமாகும். சிலருக்கு இதயத்திற்கும், நுரையீரலுக்கும் இடையே உள்ள திரவத்தால் கூட ஏற்படும்.

natural-remedies-lung-pain

நுரையீரல் தொடர்பான தொற்றுநோய்களான நிமோனியா போன்றவையும் இது ஏற்பட காரணமாக இருக்கலாம். இந்த பிளேரிசியை குணப்படுத்த தடுப்பு மருந்துகள், வலிநிவாரணிகள் பல வழிகள் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களின் மூலம் இந்த நுரையீரல் வீக்கத்தையும், வலியையும் குணப்படுத்தலாம். எந்த பொருட்கள் நுரையீரல் வலியை குணப்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிக்கும் புறமே படுத்தல்

வலிக்கும் புறமே படுத்தல்

இது கொஞ்சம் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இது பலனளிக்க கூடிய ஒன்று. பிளேரிசியால் நுரையீரல் வலி ஏற்படும்போது எந்த பக்கம் வலிக்கிறதோ அந்த பக்கமே அதிக அழுத்தம் கொடுத்து படுப்பது வலியை குறைக்கும். அதிக அழுத்தம் கொடுத்து படுக்கும்போது அங்கே மார்பு செயல்பாடுகள் குறையும்.

பூண்டு

பூண்டு

நெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிடுவது நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைபிடிக்கபட்டுவரும் ஒன்றாகும். பூண்டில் இயற்கையாகவே உள்ள ஆர்கனோசல்பர் வீக்கத்தை கட்டுப்படுத்தும் குணமுடையது. அதுமட்டுமின்றி இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் காலை வெறும்வயிற்றில் சில பூண்டுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் நுரையீரல் வீக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

தேன்

தேன்

இயற்கையாகவே தேன் ஒரு மருந்தாகும். பழங்கால மருத்துவ குறிப்புகளிலேயே தேனை நுரையீரல் நோய்க்களுக்கு பயபப்டுத்தியதாக குறிப்புகள் உள்ளது. இதிலுள்ள TNF அழற்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வீக்கத்தை குறைக்கும். மருத்துவரீதியாகவும் தேனை எடுத்துக்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்டாலான்டின் E2 ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிளேரிசி தேநீர்

பிளேரிசி தேநீர்

அசுகிபாஸ் திபெரோசா என்னும் இந்த இலை நுரையீரல் வீக்கமின்றி அனைத்து விதமான வீக்கத்தையும் குணப்படுத்தும் திறன்கொண்டது. மேலும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் நிமோனியாவையும் இது குணப்படுத்தும். இதனை தேனீராகவோ அல்லது கஷாயமாகவோ காய்ச்சி குடிப்பது உங்கள் காய்ச்சல் மற்றும் வீக்கத்தை விரைவில் குணஓடுதும். ஒருநாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை குடிக்கக்கூடாது.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

தன்னுடய அதிக நோயெதிர்ப்பு சக்திக்காகவே புகழ்பெற்ற ஒன்று மஞ்சள். மஞ்சள் பிளேரிசியால் ஏற்படக்கூடிய நெஞ்சுவலியை குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் ஏனெனில் இதிலும் தேனைப்போலவே புரோஸ்டாலான்டின் E2 அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இது நுரையீரலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்கவைத்து தூங்குவதற்கு முன் குடிக்கவும்.

இஞ்சி தேநீர்

இஞ்சி தேநீர்

உங்களின் நுரையீரல் வலியை குணப்படுத்தக்கூடிய மற்றொரு அற்புத பொருள் இஞ்சியாகும். இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளது, இது வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் வழங்கும். அதுமட்டுமின்றி இது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் பெற்றது. இஞ்சியை நீரிலே அரைமணிநேரம் ஊறவைத்து, அதன்பின்னர் தேநீர் தயாரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.

சீரகம்

சீரகம்

உணவில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சீரகம் உண்மையில் ஒரு மருந்துப்பொருளாகும். இதிலுள்ள காரவன் என்னும் மூலப்பொருள் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. இயற்கை வலி நிவாரணியான இதை அரை அல்லது கால் ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடித்தால் நெஞ்சு வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

துளசி

துளசி

பல மருத்துவ குணங்களை கொண்ட துளசி நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதில் உள்ள காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பணியை சிறப்பாக செய்கிறது. மார்பு வலியை ஏற்படுத்தக்கூடிய பேத்தோஜனை இது குறைக்கிறது. துளசியை பச்சையாகவோ அல்லது காயவைத்து தேனீராகவோ தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural remedies for lung pain

Pleurisy or inflammation of the membrane which covers your lungs and chest cavity, can cause chest pain. many home remedies are available to deal with the condition
Desktop Bottom Promotion