For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈறுகளில் சீழ் பிடித்துள்ளதா? இதோ அதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!

இங்கு பயோரியா பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

பயோரியா என்றதும் பலரும் ஏதோ ஒரு புதிய வகை நோய் என்று நினைப்போம். ஆனால் இந்த பயோரியா பிரச்சனையால் பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அவஸ்தைப்பட்டிருப்போம். பயோரியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஈறு பிரச்சனையாகும். இது ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்தும். இதன் தீவிர நிலையில் இது பற்களின் வேரைச் சுற்றியுள்ள பகுதியை பெரிதும் பாதிக்கும்.

பயோரியா பிரச்சனை இருந்தால், ஈறுகளில் இருந்து சீழ் கசியும் மற்றும் பற்கள் தளர்ந்து ஆட ஆரம்பிக்கும். பயோரியா பிரச்சனைக்கான அறிகுறிகளாவன பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவு, ஈறுகளில் புண், சாப்பிடும் போது பல் வலி, வாய் துர்நாற்றம் மற்றும் வீக்கம், ஈறுகள் சிவந்து காணப்படுவது போன்றவைகளாகும். இம்மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், மோசமான வாய் சுகாதாரம்.

Home Remedies for Pyorrhea (Pus in Gums)

ஒருவரது வாயின் ஆரோக்கியம் உணவுப் பழக்கங்களைப் பொறுத்தது. எப்போது அதிகளவிலான சர்க்கரை அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறோமோ, அப்போது வாயில் கிருமிகளின் அளவு அதிகரிக்கும். இதனால் பயோரியா பிரச்சனை ஏற்படும். மேலும் இந்த பிரச்சனையானது ஒருவரது உடலில் சில வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் குறைபாட்டினாலும் ஏற்படலாம். பயோரியா அச்சம் கொள்ள வேண்டிய அளவிலான மிகப்பெரிய பிரச்சனை இல்லை. ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலமே இப்பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிகாரம் மற்றும் மாதுளை பட்டை

படிகாரம் மற்றும் மாதுளை பட்டை

500 கிராம் உலர்ந்த மாதுளை பட்டை, 10 கிராம் படிகாரம், எப்சம் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பொடியால் தினமும் 2 முறை பற்களைத் துலக்க வேண்டும். இதனால் எப்பேற்பட்ட ஈறு பிரச்சனைகளும் விரைவில் குணமாகும்.

விளக்கெண்ணெய், கற்பூரம் மற்றும் தேன்

விளக்கெண்ணெய், கற்பூரம் மற்றும் தேன்

200 மிலி விளக்கெண்ணெய், 100 மிலி தேன் மற்றும் 5 கிராம் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்து, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் வேப்பங்குச்சியை எடுத்து, இந்த பேஸ்ட்டைத் தொட்டு, பின்பு எப்போதும் போன்று பற்களிலும், ஈறுகளிலும் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் மற்றும் பசலைக்கீரை

கேரட் மற்றும் பசலைக்கீரை

கேரட் மற்றும் பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பயோரியா பிரச்சனை இருந்தால், இந்த இரண்டையும் கொண்டு சூப் தயாரித்து தினமும் குடியுங்கள். இல்லாவிட்டால், கேரட் ஜூஸ் மற்றும் பசலைக்கீரை ஜூஸை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கொய்யா

கொய்யா

கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது மற்றும் இது பற்களுக்கு மிகவும் நல்லது. நன்கு கனியாத கொய்யாவை உப்பு தொட்டு வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பயோரியா குணமாகும். அதேப் போல் பழுத்த கொய்யா இலையை வாயில் போட்டு மெல்லுவதாலும், நன்மை கிட்டும். இது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு பயோரியாவை சரிசெய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இது சற்று எரிச்சலைத் தரலாம். எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தொடர்ச்சியாக மசாஜ் செய்து வந்தால், விரைவில் இரத்தக்கசிவு நின்றுவிடும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தாலும், பயோரியா சரியாகும். பற்களைத் துலக்கிய பின், கடுகு எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, ஈறுகளை மசாஜ் செய்யுங்கள். ஒருவேளை உங்களது ஈறுகளல் வலி கடுமையாக இருந்தால், பஞ்சுருண்டையில் இந்த கலவையை நனைத்து, ஈறுகளில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத் தோல்

ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத் தோல்

ஆரஞ்சு தோல் பயோரியா பிரச்சனையை குணமாக்கும். ஆரஞ்சு தோலைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்யுஙக்ள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி பற்களுக்கு கிடைத்து, இரத்தக்கசிவு நிறுத்தப்படும். அதேப் போல் வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்வதன் மூலமும், ஈறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத் துண்டு ஒன்றை எடுத்து, வாயினுள் பற்களுக்கு அடியில் வையுங்கள். சில நிமிடங்கள் வாயில் எச்சில் சேரும் வரை அப்படியே இருங்கள். இதனால் ஈறுகளில் உள்ள அழற்சி குறைந்து, பயோரியா பிரச்சனை சரியாகும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

பயோரியாவை சரிசெய்ய நினைத்தால், காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் வைத்திருங்கள். முக்கியமாக இந்த 10 நிமிடமும் அவ்வப்போது வாயைக் கொப்பளிக்க வேண்டும். பின் எண்ணெயை துப்புங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், ஈறுகள் ஆரோக்கியமடைந்து, இரத்தக்கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Pyorrhea (Pus in Gums)

Here are some home remedies for pyorrhea (pus in gums). Read on to know more...
Story first published: Wednesday, May 9, 2018, 16:00 [IST]
Desktop Bottom Promotion