For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் நாக்கினால் பற்களை துழாவக் கூடாது என தெரியுமா?

ஏன் நாக்கினால் பற்களை துழாவக் கூடாது என தெரியுமா?

|

அனைவருக்கும் 32 பற்கள் இருந்தாலும், பல் வரிசை ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கு சில உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நமது பழக்க வழக்கங்களும் தான் காரணம். முக்கியமாக கை சூப்புவது, நாவினை கொண்டு பற்களை துழாவுவது, தாடை பிரச்சனை என சிலவற்றை கூறலாம்.

Why You Should Not Press Your Teeth by Tongue Inner-side?

Image Credit: Lankasri

இதில், நமது பழக்க வழக்கத்தில் அடங்கியிருப்பவை கை சூப்புதலும், நாக்கினை கொண்டு பற்களை துழாவுவதும். இதனால், பற்களின் வரிசை எப்படி பாதிக்கப்படுகிறது என இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் கூடாது?

ஏன் கூடாது?

நீங்கள் நாக்கினை கொண்டு பற்களை துழாவுவதால், மேல் மற்றும் கீழ் முன் வரிசை பற்களின் அமைப்பு மாறிவிடும். கடவாய் பற்களில் ஏதேனும் சிக்கிக்கொண்டால், நாக்கினை கொண்டு சுழட்டி துழாவுது போல, அடிக்கடி சிலர் முன்வரிசை பற்களையும் நாவினை கொண்டு சுழட்டி துழாவிக் கொண்டே இருப்பார்கள். இது பற்களின் அழகான வரிசையை கெடுக்கும்.

முன்னும் பின்னுமாக!

முன்னும் பின்னுமாக!

சிலருக்கு சிறு வயதில் பற்களின் வரிசை நன்றாக தான் இருந்திருக்கும். ஆனால், வளர, வளர பற்கள் முன்னும், பின்னுமாக அல்லது முன் வரிசை பற்கள் மட்டும் தூக்கிக் கொண்டு இருக்கும்.

நாம் மேல கூறியது போல, இதற்க முக்கிய காரணமாக இருப்பது நாவினை கொண்டு பற்களை துழாவுதல் மற்றும் கை சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது தான்.

க்ளிப்!

க்ளிப்!

இப்படி பற்களின் வரிசை முன்னும் பின்னுமாக சீரில்லாமல் இருந்தால், பற்கள் தூக்கி கொண்டு இருந்தால் க்ளிப் போடவேண்டும் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

க்ளிப் மாட்டிக் கொள்வதை கண்டு நாம் கேலி செய்திருப்போம். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல. பணமும் கொஞ்சம் அதிகம். அதே போல, நிறைய அசௌகரியங்களை நீங்கள் எதிர்க் கொள்ள வேண்டி இருக்கும்.

க்ளிப் மாட்ட வேண்டிய சூழல் வந்தால், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சிலவன இருக்கின்றன...

உணவுகள்!

உணவுகள்!

க்ளிப் மாட்டிய பிறகு சாக்லேட், சூயிங்கம், அல்வா போன்ற மிருதுவான உணவுகள் மற்றும் பற்களில் எளிதாக சிக்கிக் கொள்ளும் உணவுகளை சாப்பிட கூடாது. ஏனெனில், இவை எளிதாக க்ளிப்புகளில் சிக்கிக் கொள்ளும்.

அதே போல, க்ளிப்பின் இறுக்கம் குறையாமல் இருக்க கடினமாக உணவுகள் தவிர்க்க வேண்டும். முறுக்கில் இருந்து சிக்கன் மட்டன் வரை இதில் எல்லா கடின உணவுகளும் அடங்கும்.

பிரஷ்!

பிரஷ்!

உணவுகள் மட்டுமின்றி வேறு விஷயங்களிலும் நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பிரஷ். ஆம்! நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இறுகக் வேண்டும்.

நீங்கள் உணவருந்திய பிறகு கட்டாயம் வாய் கழுவி, கொப்பளிக்க வேண்டும். வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உணவு அருந்திய பிறகு, சாப்பிட்ட உணவு க்ளிப்பில் சிக்கியுள்ளதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Not Press Your Teeth by Tongue Inner-side?

Why You Should Not Press Your Teeth by Tongue Inner side?
Desktop Bottom Promotion