For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 வகையில, நீங்க குண்டா இருக்க எந்த வகை கொழுப்பு காரணம்?

கொழுப்பிலே இரண்டு வகை இருக்கின்றன. எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல். எல்.டி.எல் கொழுப்பு தீயது, எச்.டி.எல் கொழுப்பு நல்லது.

|

அனைவரும் நமது உடலில் ஒரே வகையான கொழுப்பு தான் இருக்கிறது என கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. கொழுப்பிலே இரண்டு வகை இருக்கின்றன. எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல்.

எல்.டி.எல் கொழுப்பு தீயது, எச்.டி.எல் கொழுப்பு நல்லது. முட்டையின் மஞ்சள் கரு, தூய நெய் போன்றவற்றில் இருந்து கிடைப்பது இந்த வகை நல்ல கொழுப்பு.

நல்ல கொழுப்பு என்பது என்ஜின் ஆயில் போல, அது உடலில் இருந்தால் தான் உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். அதுவும் அத்தியாவசியமான ஒன்று.

Types Of Body Fat That Everyone Should Know About!

Image Credit: Cuisineandhealth.com

இது போக உடலில் கொழுப்பை ஆறு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். உடலில் எங்கெங்கே சேமிப்பாகின்றன, எப்படிப்பட்ட வகையில் சேமிப்பாகி உடலில் என்னென்ன பிரச்சனை உண்டாக காரணமாக இருக்கின்றன என இந்த ஆறு வகை கொழுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆறு வகை கொழுப்பு பற்றி நீங்கள் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை கொழுப்பு!

வெள்ளை கொழுப்பு!

ஒயிட் ஃபேட் எனப்படும் இந்த வெள்ளை கொழுப்பு, Adipocytes என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெள்ளை கொழுப்பு என கூறுகின்றனர். இது இரத்தத்தில் குறைந்த அடர்த்தி மற்றும் மிடோகோன்றியா (Mitochondria) போன்ற காரணங்களால் உண்டாகிறது. இந்த கொழுப்பு செல்கள், பசியை தூண்டும் லெப்டின் செல்களை தூண்டும். இதன் காரனத்தால் அடிக்கடி பசி எடுத்துக் கொண்டே இருக்கும்., உடல் எடை அதிகரிக்கும்.

பழுப்பு கொழுப்பு!

பழுப்பு கொழுப்பு!

பிரவுன் ஃபேட் எனப்படும் இந்த பழுப்பு கொழுப்பு கொழுப்பை கரைத்தாலும் உடலில் எனர்ஜி சேமிப்பாகும் இயக்கத்தை தடுக்கும். இது Mitochondria-யாவால் சூழப்பட்டது தான். நீங்கள் தினமும் உங்கள் உடல் உழைப்பை, உடற் பயிற்சிகளை அதிகரித்தாலே இது வெள்ளை கொழுப்பை கரைத்து சரியாகிவிடும்.

பழுப்பு வெள்ளை கொழுப்பு!

பழுப்பு வெள்ளை கொழுப்பு!

Beige Fat எனப்படும் இந்த பழுப்பு வெள்ளை கொழுப்பு, வெள்ளை மட்டும் பழுப்பு கொழுப்புக்கு இடைப்பட்ட ஒன்றாகும். இது வெள்ளை கொழுப்பில் இருந்து பழுப்பு கொழுப்பாக மாறும் இடைப்பட்ட நிலையில் அமையும் கொழுப்பு வகை.

எசன்ஷியல் ஃபேட்!

எசன்ஷியல் ஃபேட்!

அத்தியாவசிய கொழுப்பு (எசன்ஷியல் ஃபேட்) நாம் உயிர்வாழ மிகவும் அவசியமானது. இது தான் உடலின் தட்பவெட்ப நிலையை ஒருநிலையில் வைத்து, செல்களின் அமைப்பை மெய்ண்டெயின் செய்ய உதவுகிறது. மேலும், இது வைட்டமின் சத்துக்கள் உள்வாங்கவும் பயனளிக்கிறது. உயிர் வாழ அவசியமான இந்த கொழுப்பை ஒருநாளும் உடலில் இருந்து இழக்க கூடாது.

உள்ளுறுப்பு கொழுப்பு!

உள்ளுறுப்பு கொழுப்பு!

இந்த உள்ளுறுப்பு கொழுப்பு வயிற்றின் அடிப்பகுதி, கணையம், கல்லீரல் போன்ற பாகங்களை சுற்றி இருக்கும் கொழுப்பாகும். இது அதிகரித்தால் தான் டைப் 2 நீரிழிவு, மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் உண்டாகும். எனவே, இதை உடற்பயிற்சி செய்து குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தோலுக்கு அடியே தேங்கும் கொழுப்பு!

தோலுக்கு அடியே தேங்கும் கொழுப்பு!

இந்த வகை கொழுப்பு தோலுக்கு அடியே சேமிப்பாகும் கொழுப்பாகும். நமது உடலில் இருக்கும் 90% கொழுப்பு இந்த வகையானது தான். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் முதலில் கார்ப்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக உடல் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் இந்த வகை கொழுப்பு குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Body Fat That Everyone Should Know About!

Types Of Body Fat That Everyone Should Know About!
Desktop Bottom Promotion