For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 விஷயத்த நீங்க கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா நீண்டநாள் ஆரோக்கியமா வாழலாம்!

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் கனவும். ஆனால், அது கனவாக மட்டுமே இன்று பலரது வாழ்வில் இருக்கிறது.

|

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் கனவும். ஆனால், அது கனவாக மட்டுமே இன்று பலரது வாழ்வில் இருக்கிறது.

முப்பதை தாண்டுவதற்கும் குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம், மாரடைப்பு என பலரும் நோய்களை தன்னுடன் கட்டிக் கொண்டு சுற்றுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள் தான். மேலும், இதிலிருந்து விடுப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை மீண்டும் பின்தொடர வேண்டும் என்றால் இந்த பத்து விஷயங்களில் மட்டும் நீங்கள் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தால் போதும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு!

உணவு!

உணவு என்பது அத்தியாவசிய தேவை. ஆயினும், அதை தேவைப்படும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். நம் உடலே நம்மிடம் எப்போது சாப்பிட வேண்டும் என கூறும். பசிக்கும் போது செல்கள் மூளைக்கு செய்தி அனுப்பி நம்மை சாப்பிட கூறும்.

ஒருவர் ஆரோக்கியமான உடல்நலம் பெற முதலாவதாக பின்பற்ற வேண்டியது பசிக்கும் போது உண்பது தான். நாம் பசிக்காமல் சாப்பிடுவதன் காரணத்தாலும், உடலில் கலோரிகள் கரைக்காமல் சாப்பிடுவதாலும் தான் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஜீரணம்!

ஜீரணம்!

காலை உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு முன் இடைவேளை உணவுகள் உட்கொள்வது தவறு. இதனால் தான் உடலில் தேவைக்கு அதிகமாக கலோரிகள் தேங்கி கொழுப்பு அதிகரிக்கிறது. அதிலும் ஆரோக்கியமற்ற இடைவேளை உணவுகள் அறவே ஒதுக்க வேண்டும்.

பகல் தூக்கம்!

பகல் தூக்கம்!

ஒரு நாளுக்கு ஒருமுறை தூங்கி எழுவது தான் ஆரோக்கியமான வாழ்க்கையின் முதல் அறிகுறி. கண்ட நேரத்தில் உணவு உட்கொள்வது, கண்ட நேரத்தில் உறங்குவது போன்ற செயல்கள் தான் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் செயல்களாகும்.

தூங்கி எழுவது!

தூங்கி எழுவது!

இன்று நம்மில் எத்தனை பேரால் இதை பின்பற்ற முடியும் என்பது பெரிய கேள்விகுறி. இரவு ஒன்பது மணிக்குள் உறங்கி, அதிகாலை ஐந்து மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். இது தான் சிறந்த தூக்க சுழற்சி முறையாகும்.

நமது பெற்றோர், ஏன் நாமே சிறுவயதில் ஸ்மார்ட் போன் வருகையின் முன்பு வரை இந்த நேரத்தை தான் பின்பற்றி வந்தோம். இதில் மாற்றம் ஏற்பட்ட பிறகே, உடல்நல சீர்கேடுகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

ஆடைகள்!

ஆடைகள்!

பட்டாடையோ, கிழிந்த ஆடையோ? உடுத்துவதை சுகாதாரமான முறையில் உடுத்த வேண்டும். முக்கியமாக உள்ளாடைகள், சாக்ஸ்-ம் சேர்த்து, நன்கு துவைத்து உடுத்த வேண்டும், இவற்றால் தான் சரும பிரச்சனைகள், அந்தரங்க பிரச்சனைகள் எழுகின்றன.

காற்று!

காற்று!

காற்று, நீர் இல்லாமல் மனிதரால் வாழ்வே முடியாது. உணவருந்தாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நீர் அருந்தாமல் இரண்டாவது நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.

காற்று இல்லாமல் ஐந்து நிமிடமே அதிகம். நீங்கள் வாழும் வீட்டில் ஏ.சி. இருக்கிறதோ, இல்லையோ, நான்கு புறமும் ஜன்னல்கள் இருக்க வேண்டும், அதில் காற்று விசாலமாக வந்து செல்ல வேண்டும்.

கண்கள்!

கண்கள்!

கண்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம் அதை நாம் உணர்வதே இல்லை. நீங்கள் அதிக நேரம் கண் விழித்து கொண்டே இருப்பது மூளையை சோர்வடைய செய்யும்.

மூளை சோர்வடைந்தால் உடல் உறுப்புக்கள் மொத்தமும் சோர்வடைந்து போகும். எனவே, கண்களின் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிந்தனை!

சிந்தனை!

சிந்தனை செய் மனமே என பாடலே எழுதி வைத்துள்ளனர். அதற்காக 24 மணிநேரமும் எதையாவது சிந்தனை செய்துக் கொண்டே இருக்க கூடாது. மனதிற்கும் அமைதி கொடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை போலவே, மன ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தால் தான் நீண்டநாள் வாழ முடியும்.

இஞ்சி!

இஞ்சி!

படுக்கையை விட்டு எழுந்தவுடன் முதலில் அரை பாட்டில் நீராவது பருகுங்கள். அதன் பிறகு சிறு துண்டு இஞ்சி உட்கொள்ளுங்கள். இது ஆரோக்கியம் மேம்பட உதவும். தினசரி உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, தேன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக மஞ்சள், இவை அனைத்தும் ஆரோக்கியத்தை காக்கும் காவலர்கள்.

உடற்பயிற்சி!

உடற்பயிற்சி!

டயட்டில் ஆரோக்கியமாக இருப்பதை போலவே, உடல் பயிற்சியிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் நடைபயிற்சியாவது செய்ய வேண்டும். ஓட்டம் மற்றும் நீச்சல் உடலை உறுதியாக்கும் சிறந்த பயிற்சிகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Healthy Tips for Longevity!

Ten Healthy Tips for Longevity!
Story first published: Saturday, July 8, 2017, 10:42 [IST]
Desktop Bottom Promotion