ஆண்களிடம் பரவலாக காணப்படும் 5 ஆண்குறி பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை பெரிதும் மனதளவில் சீர்குலைந்து போக செய்யும் பிரச்சனை ஆண்குறி பிரச்சனை தான். ஆனால், ஆண்குறியில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே அதை ஆண்கள் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்து பரிசோதனை அல்லது சிகிச்சை மேற்கொள்கிறார்களா? என்றால் 95% இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது.

குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அன்றாடம் நாம் பயன்படுத்தும் சோப்பு போன்றவை காரணங்களால் ஆண்களுக்கு ஒருசில ஆண்குறி பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை நாம் எளிதாக மருந்துகள் மூலம் சரி செய்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்ச்சி திறன் குறைபாடு!

உணர்ச்சி திறன் குறைபாடு!

அதிகப்படியான தாம்பத்திய ஈடுபாடு, சுய இன்பம் காணுதல் அல்லது மிகவும் இறுக்கமான உள்ளாடை, கீழ் ஆடைகள் உடுத்துவதால் அந்தரங்கள் பகுதி நரம்புகளில் உணர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.

தீர்வு!

தீர்வு!

இதனால், ஆணுறுப்பு உணர்ச்சி குறையும், இதனால் தாம்பத்தியத்தில் ஈடுபாடும் போது சிறந்து விளங்க முடியாமல் போகலாம். இதற்கு வைட்டமின் டி, வைட்டமின் பி5 சிறந்த தீர்வு. மேலும், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

வரட்சியான ஆண்குறி தோல்!

வரட்சியான ஆண்குறி தோல்!

நீங்கள் பயன்படுத்தும் சோப்புப், துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் போன்றவை ஆண்குறி சருமம் வறட்சியாக காரணிகளாக இருக்கின்றன.

தீர்வு!

தீர்வு!

இவை ஆண்குறி தோல் சுருங்கி காணப்படுதல் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியமாக உணர செய்யும். இயற்கை மாய்ஸ்சரைசர்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை நல்ல பலனளிக்கும்.

அரிப்பு, சிவந்து போதல்!

அரிப்பு, சிவந்து போதல்!

ஆண்குறி பகுதியில் சிவந்து காணப்படுதல், அரிப்பு, தோல் மீது செதில்கள் போல இருப்பது ஃபங்கள் இன்பெக்ஷன், சொரியாசிஸ், கடினமாக சோப்பு போன்ற காரனங்களால் உண்டாகும் ஆண்குறி பிரச்சனை. பால்வினை நோய் தாக்கம் இருந்தால் கூட இந்த பிரச்சனை வரும்.

தீர்வு!

தீர்வு!

இதற்கான ஒரே தீர்வு தகுந்த மருத்துவ நிபுணரிடம் கலந்தாய்வு செய்து சிகிச்சை பெறுவது தான். மேலும், வெளிப்புற ஆண்குறி தோல்-க்கு அவசியமான வைட்டமின்கள் எ மற்றும் சி ஆகும்.

மிகுதியான உணர்ச்சி!

மிகுதியான உணர்ச்சி!

சில ஆண்களுக்கு ஆண்குறி தோல் மிகவும் உணர்ச்சி மிக்கதாய் இருக்கும். இதற்கு அதிகப்படியான செக்ஸ் மற்றும் சுய இன்பம் தான் காரணம் என கூறப்படுகிறது.

மேலும், சில சமயம் பாக்டீரியா இன்பெக்ஷன் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை பாக்டீரியா தாக்கமாக இருந்தால் ஆண்குறி மேல்தோல் சிவந்தும், எரிச்சலுடனும் காணப்படும்.

தீர்வு!

தீர்வு!

இதை சரி செய்ய வைட்டமின் ஈ, எ, அமினோ அமிலங்கள், அசிலைட் எல் கார்னைடைன் போன்றவை அவசியம் தேவை.

ஒருவேளை இன்பெக்ஷன் அதிகரிப்பதை அறிந்தால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இதனால் மேல் தோல் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் உள்ளன.

ஆண்குறி இரத்த ஓட்ட பிரச்சனைகள்!

ஆண்குறி இரத்த ஓட்ட பிரச்சனைகள்!

விறைப்பு தன்மை உட்பட மேல் தோல் ஆரோக்கியம் என பல ஆண்குறி பிரச்சனை உண்டாக ஆண்குறி இரத்த ஓட்டம் குறைபாடு காரணியாக இருக்கிறது. இதனால், விறைப்பு குறைபாடு, உணர்ச்சி குறைபாடு, வலி போன்றவை ஏற்படலாம். எனவே, இதை நீங்கள் நேரம் தாமதிக்காமல் தகுந்த சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

நிபுணர்கள் குறிப்புக்கள்!

நிபுணர்கள் குறிப்புக்கள்!

  1. ஆண்குறியில் எந்தவித மாற்றங்கள் உணர்ந்தாலும் உடனே தகுந்த மருத்துவரை அணுகுங்கள்.
  2. வறட்சி, சிவந்து போதல், அரிப்பு, வேறு எந்த வித உணர்வாக இருந்தாலும், உடனே அதை சரி செய்து கொள்ள வேண்டும்.
  3. சில ஊட்டச்சத்து குறைபாடுகளால் கூட இவை ஏற்படலாம். அதற்கு சரியான மருந்துகள் உட்கொண்டாலே இவற்றுக்கு சிறந்த தீர்வு கண்டுவிடலாம்.
  4. சங்கோஜம் என்ற பெயரில் பிரச்சனையை பெரிதுப்படுத்தாமல். துரிதமாக சிகிச்சை பெற்று தீர்வுக் காண்பது புத்திசாலித்தனம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Some Common Penis Problems Men Experience a Lot!

Some Common Penis Problems Men Experience a Lot!
Story first published: Thursday, June 22, 2017, 14:15 [IST]
Subscribe Newsletter