For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளியலறையில் நீங்க செய்யும் மிக பெரிய 9 தவறுகள்!

இங்கு குளியலறையில் நீங்க செய்யும் மிக பெரிய 9 தவறுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

இதனால எல்லாம் என்ன ஆயிடும், இதெல்லாம் பெரிய தப்பா... என்ற அலட்சிய எண்ணத்தில் நாம் செய்யும் தவறுகள் தான் பல பக்க(கா) விளைவுகளை அளிக்கின்றன.

குளியலறையில் நீங்க செய்யும் மிக பெரிய 9 தவறுகள்!

அந்த வகையில் உங்க உடலில் சரும தொற்றுகள் அதிகரிக்க காரணமாக இருக்கும், நீங்கள் செய்யும் குளியலறை தவறுகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு #1

தவறு #1

ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரே டூத் பிரஷை பயன்படுத்துவது. இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும், வாயில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க காரணியாக அமையும்.

தவறு #2

தவறு #2

ஷேவிங் ரேசரை கழிவரையிலேயே வைப்பது. தண்ணீர் அதன் மீது அதிகம் படும் வாய்ப்பு இருப்பதால் ரேசர் எளிதாக துருப்பிடித்து போகும்., பாக்டீரியா தாக்கம் உண்டாகும். இதனால் இரண்டாம் பயன்பாட்டின் போதே எரிச்சல் அதிகமாக உண்டாகலாம், காயங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

தவறு #3

தவறு #3

ஒரே டவலில் அனைவரும் கை துடைக்கும் பழக்கம் கொண்டிருப்பதும் தவறு. அனைவரும் தனிதனி டவல் பயன்படுத்த வேண்டும். அதை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

தவறு #4

தவறு #4

காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் அதிக சூட்டில் குளிக்க கூடாது.

தவறு #5

தவறு #5

சோப்பை ஈரமான இடத்தில் வைப்பது, இதனால் எளிதாக சோப்பில் பாக்டீரியா அதிகரிக்கும்.

தவறு #6

தவறு #6

கறைப்படிந்த ஷவர் கர்டனை துவைக்காமல் இருப்பது. இதனால் கூட குளியல் அறையில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்.

தவறு #7

தவறு #7

உடல் துடைக்கும் டவலை ஈரத்துடன் குளியல் அறையிலேயே விட்டுவிடுவது. இதை மீண்டும் மறுநாள் பயன்படுத்தினால் சருமத்தில் பாக்டீரியாக்கள் தான் ஒட்டும்.

தவறு #8

தவறு #8

உடல் தேய்க்கும் மஞ்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.

தவறு #9

தவறு #9

கழிவறையை தினமும் கழுவ வேண்டும். பல நாட்கள் கழுவாமல் அதே கழிவறையை பயன்படுத்துவதும் போது கழிவறையை பயன்படுத்துவது போன்றது தான். இதனால் பெண்களுக்கு தான் அதிக தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Bathroom Habits That Are Very Very Harmful

Nine Bathroom Habits That Are Very Very Harmful
Desktop Bottom Promotion