For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தடை மாத்திரை சாப்பிட்டாலும் பிரச்சனை! நிறுத்தினாலும் பிரச்சனை! அதன் விளைவுகள் தெரியுமா!

இங்கே ஹார்மோன் இம்பாலன்ஸ் பிரச்சனையின் மூல காரணங்கள் மற்றும் எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

சமீப ஆண்டு காலமாக பெண்கள் மத்தியில் ஹார்மோன் இம்பாலன்ஸ் அமைதியாக வளர்ந்து வருகிறது.ஏன் இது ஒரு தீவிர பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்கவில்லையெனில் மிகப் பெரிய பிரச்சனைகளான நீரிழிவு,இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும்.

ஹார்மோன் இம்பாலன்ஸ்-ன் அறிகுறிகள் மட்டுமின்றி பக்கவிளைவுகளால் ஏற்படக்கூடிய நீரிழிவு,தைராய்டு மற்றும் புற்று நோய் நமது வாழ்க்கையை மிகவும் ரணப் படுத்தும். இந்த பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமான மருத்துவர் திஷா கூறுகிறார். தொடர்ந்து படியுங்கள்.

Natural treatment for Hormonal imbalance

"இதே ஹார்மோன் சம நிலையற்ற சூழ்நிலையில் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இருந்தேன்.பி.சி.ஓ.எஸ் (PCOS) குணமாக்க மாத்திரைகள் மற்றும் மருந்துகள் நான் எடுத்துக் கொண்டேன்.இந்த நேரத்தில் தான் எனக்கு குணப்படுத்த முடியாத ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இவை அனைத்தும் தெரிந்த நான் உடைந்து போகவில்லை.அதற்கு பதிலாக அதைப் பற்றிய விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்ச்சியான சுய பரிசோதனைகள் மேற்கொண்டு மகளிர் சுகாதார மையம் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து குணமடைந்து மீண்டு வந்தேன்.

இப்பொழுது நானும் இந்த பொதுப்பணி திட்டத்தில் ஒரு உறுப்பினராக செயல்பட்டு ஹார்மோன் இம்பாலன்ஸ்-ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன்."

எதனால் இந்த ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறது?

இந்த நாட்களில் சுற்றுப்புற சூழல் பெண்களுக்கு ஏற்றதாக அமைவதில்லை.இவை ஹார்மோன்களை பாதிக்கும் காரணிகளாகவே அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள் :

காரணங்கள் :

கருத்தடை மாத்திரைகள்,சோயா,கொழுப்பு (அ) வெண்ணெய் கெட்டு போவதால் ஏற்படும் துர்நாற்றம்,ஆரோக்கியமற்ற கொழுப்புகள்,இறைச்சி மற்றும் பால் பொருட்கள்,பூச்சிக்கொல்லிகள்,சுற்றுசூழல் மாசு மற்றும் பிளாஸ்டிக் இவை அனைத்தும் முக்கிய காரணங்கள்.

கருத்தடை மாத்திரைகள் :

கருத்தடை மாத்திரைகள் :

சில காரணங்களுக்காக மாதவிடாய் சுழற்சியை தடுத்து மாதவிடாய் வராமல் தடுக்கவும்,கருத்தடை மாத்திரைகளையும் எடுக்கின்றனர்.இது அதிர்ச்சிகரமான தகவல்.இது கடவுள் ஏற்படுத்திய பெண்களின் உடல் அமைப்பை மாற்றுகின்றது.இன்றைய நாட்களில் மலட்டுத்தன்மைக்கு கருத்தடை மாத்திரைகளும் முக்கிய காரணம் ஆகும்.

இந்த மாத்திரைகளை நிறுத்தினாலும் இது உடலில் எதிர்மறை விளைவுகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி புற்றுநோய்,பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாகவும் மற்றும் எலும்பின் வலுவைக் குறைக்கவும்,உயர் ரத்த அழுத்தம் மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தும்.

ஹார்மோன் மாற்றத்தை குணப்படுத்த கீழ்கண்டவற்றை கடைபிடியுங்கள்.

உங்கள் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தரமான பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்தது.ஆனால் சோயாவைத் தவிர்க்க வேண்டும் நல்ல கொழுப்புகளை சேர்க்க வேண்டும்.அவகேடோ மற்றும் ஆலிவ் கருப்பைக்கு மிகவும் சிறந்தது.சிட்ரஸ் பழங்கள் மார்பக ஆரோக்கியத்திற்கு உகந்தது. சர்க்கரை,காபி,பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும். குறுக்குவெட்டு காய்களை எடுக்கவேண்டும்.ப்ரோக்கோலி,காளிப்ளவர்,முட்டைகோஸ்,காலே முதலியன.

நார்ச்சத்து அதிகம் எடுக்க வேண்டும்.அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் நீக்க எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் உதவும்.ஓட்ஸ் எடுக்க வேண்டும்.இவை கெட்ட ஈஸ்ட்ரோஜென்னை அகற்றும்.

உடற்பயிற்சி மற்றும் சூரிய ஒளி.

உடற்பயிற்சி மற்றும் சூரிய ஒளி.

உடற்பயிற்சி ஹார்மோன்கள் உற்பத்தியை தூண்டுகிறது.சூரிய ஒளி தோல் மீது பட்டு ஹார்மோன் உற்பத்தி சுழற்சியைத் தூண்டுகிறது.சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி மற்றும் மெலட்டோனினை உற்பத்தி செய்கிறது.இவை இரவில் நல்ல ஓய்வைத் தரும்.மெலடோனின் உற்பத்தி இல்லாமல் பலருக்கு தூங்க கடினமாக இருக்கும்.குழந்தை பேரும் நிலவொளியில் தூண்டப்படுகிறது.

மெத்தில் உள்ள உணவுகள் :

மெத்தில் உள்ள உணவுகள் :

மெத்திலாக்கம் அமைப்பு நல்ல ஹார்மோன்களை உருவாக்கும்.பழங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றில் குளூட்டோத்தியானின் அதிகம் உள்ளது.வைட்டமின்-பி சத்து எடுக்க வேண்டும்.

 மூலிகைகள் மற்றும் உணவுகள் :

மூலிகைகள் மற்றும் உணவுகள் :

தேங்காய்,வெண்ணெய்,மஞ்சள்,நெல்லிக்காய் போன்ற பெர்ரி வகைகள் நாளமில்லா சுரப்பியைத் தூண்டி ப்ரோஜெஸ்ட்ரான் தயாரிப்பை அதிகரிக்கிறது.

வாழ்க்கை என்பது நாம் தேர்வு செய்யும் முறையைப் பொறுத்தே அமைகிறது.எனவே நாம் இந்த ஆண்டு இயற்கையை தேர்வு செய்வோம்.மேலும் செடிகள் மற்றும் சிகிச்சை முறையை தேர்வு செய்யலாம்.இதனால் சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான ஹார்மோன் வளர்ச்சியை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural treatment for Hormonal imbalance

Natural treatment for Hormonal imbalance
Story first published: Tuesday, April 18, 2017, 12:40 [IST]
Desktop Bottom Promotion