பிட்டத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நல்ல சுகாதாரம் பிட்டத்தில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். ஆனால் சில நேரங்களில் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், பிட்டத்தில் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சில நேரங்களில் மோசமான உணவுப் பழக்கம் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட பிட்டப் பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள், மன அழுத்தம் கூட பிட்டத்தில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

இங்கு பிட்டத்தில் எந்த காரணங்களுக்கு எல்லாம் துர்நாற்றம் வீசும் எனவும், அதை எப்படி தடுப்பது எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியர்வை

வியர்வை

கோடைக்காலத்தில் பிட்டத்தில் துர்நாற்றம் அதிகம் வீசினால், வியர்வையை குறைக் கூறுவோம். ஆனால் வியர்வை ஒருபோதும் துர்நாற்றத்தை உண்டாக்காது. மாறாக பிட்டத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வை அதிகம் வெளியேறும் போது, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

சுகாதாரம்

சுகாதாரம்

மலம் கழித்தப் பின், அப்பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். தற்போது எங்கும் டிஸ்யூ பேப்பர் தான் என்பதால், நீரின் அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் பிட்டப் பகுதி துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமெனில், வெறும் பேப்பர் கொண்டு சுத்தம் செய்தால் மட்டும் போதாது, நீர் பயன்படுத்தியும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆன்டி-பயாடிக்ஸ்

ஆன்டி-பயாடிக்ஸ்

தினமும் ஆன்டி-பயாடிக்ஸ் எடுப்போராக இருந்தால், அத்தகையவர்களுக்கும் பிட்டத்தில் துர்நாற்றம் வீசும்.

காயங்கள்

காயங்கள்

மலக்குடலின் புறணியில் காயங்கள் அல்லது அழற்சி மற்றும் குடல் சார்ந்த நோய்கள் இருந்தாலும், பிட்டத்தில் கடுமையான துர்நாற்றம் வீசும்.

மற்ற காரணங்கள்

மற்ற காரணங்கள்

குடற்புண் பெருங்குடலழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய், ஈரப்பதம், மூல நோய் மற்றும் க்ளூட்டன் சகிப்புத்தன்மை போன்றவைகளும் பிட்டத்தில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்களாகும்.

குளிர் நீர் குளியல்

குளிர் நீர் குளியல்

குளிர்ச்சியான நீரில் குளித்தால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி கட்டுப்படுவதாக சில ரிபோர்ட்டுகள் சொல்கிறது. அதிலும் ஒரு நாளைக்கு இரு வேளை குளித்தால், பிட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் துர்நாற்ற பிரச்சனையே இருக்காது. ஆனால் சருமம் வறட்சியடையும்.

க்ரீம்கள்/லோசன்

க்ரீம்கள்/லோசன்

சரும நிபுணர்கள் அல்லது மருத்துவர்கள், பிட்டத்தில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க க்ரீம்கள் அல்லது லோசன்களைப் பரிந்துரைத்தால் பயன்படுத்துங்கள். ஆனால் மருத்துவரிடன் ஆலோசனையின்றி கண்டதை பிட்டப் பகுதியில் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால், பிட்டத்தில் கடுமையான எரிச்சலை அனுபவிக்கக்கூடும்.

டவல்

டவல்

தினமும் குளித்த பின் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே 2 நாளைக்கு ஒருமுறை தவறாமல் டவலை துடைத்துவிடுங்கள்.

ரோமம்

ரோமம்

பிட்டத்தில் ரோமம் அதிகம் இருந்தால், அதை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவ் செய்துவிடுங்கள். ஏனெனில் அதுவே துர்நாற்றத்திற்கு ஓர் காரணமாகவும் இருக்கலாம்.

இறுக்கமான பேண்ட் கூடாது

இறுக்கமான பேண்ட் கூடாது

எப்போதும் இறுக்கமான பேண்ட் அணியக்கூடாது. இதனால் அப்பகுதியில் வியர்வை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get Rid Of Butt Odour

There are many reasons behind the bad smell at the back door. Here are some reasons and some measures to eliminate the odour....
Please Wait while comments are loading...
Subscribe Newsletter