For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள்!

உடல் எடையை குறைக்க நாட்டு வைத்தியங்கள்

By Lakshmi
|

உடல் பருமன் இன்று பலரின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சந்தைகளில் கிடைக்கும் மருந்துகளை, பல விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

Home remedies for weight loss

என்ன இருக்கிறது என்றே தெரியாமல் ஒன்றை வாங்கி பயன்படுத்தும் போது அது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், ஒரு சிலருக்கு அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நாட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இது செரிமானத்தை தூண்டுவதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயம்

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை என இருவேளைகள் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலின் கொழுப்பு குறைந்து, அளவான எடையுடன் இருக்க முடியும்.

சீரகம், திப்பிலி, மிளகு

சீரகம், திப்பிலி, மிளகு

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகம்:

பெருஞ்சீரகம்:

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

சாப்பிட வேண்டியவை

சாப்பிட வேண்டியவை

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர் ஆகிய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies for weight loss

Home remedies for weight loss
Desktop Bottom Promotion