For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் சொத்தையை போக்க தினமும் ஒருமுறை இதை மட்டும் செய்தால் போதும்!

சொத்தை பற்களை போக்குவதற்கான வீட்டு மருத்துவ குறிப்புகள்

By Lakshmi
|

சொத்தை பற்கள் உண்டாக முக்கிய காரணம் என்னவென்றால், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவது தான். இதற்கு உணவு உண்ட பிறகு வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம். பற்களில் தங்கியுள்ள உணவுகளினால், பாக்டிரியாக்கள் வளர தொடங்கிவிடும். இதனால் பற்கள் சொத்தையாகிவிடும்.

Home Remedies for cavities

இந்த சொத்தை பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், காலப்போக்கில் பற்களில் பெரிய ஓட்டை விழுந்துவிடும். மேலும் இது ஈறுகளின் மீதும் பரவி விடும். இதற்காக நீங்கள் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. உங்களது அன்றாட வாழ்வில் சில மாற்றங்களையும், சில வீட்டு வைத்திய குறிப்புகளையும் பின்பற்றினாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சூவிங் கம்

1. சூவிங் கம்

சுகர் ப்ரீ சூவிங் கம்மை உணவு உண்ட பிறகு வாயில் இட்டு மெல்லலாம். இது வாயில் உள்ள பி.எச் அளவை சமநிலைக்கு கொண்டு வரும். இதனால் பல் வலி, பல் சொத்தை ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

2. ஆயில் புல்லிங்

2. ஆயில் புல்லிங்

தினமும் காலையில் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பற்கள் சொத்தையாவதை தடுக்கலாம். பற்களின் ஆரோக்கியத்துடன் சேர்ந்து உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

3. இஞ்சி சாறு

3. இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

4. கால்சியம் உணவுகள்

4. கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

5. கொய்யா இலை

5. கொய்யா இலை

கொய்யா இலைகள் வாய் துர்நாற்றத்திற்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யுங்கள்.

6. ஐஸ் கட்டிகள்

6. ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை எடுத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

7. மஞ்சள்

7. மஞ்சள்

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

8. வேப்பிலை

8. வேப்பிலை

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் போக்கலாம்.

9. உப்பு தண்ணீர்

9. உப்பு தண்ணீர்

தினமும் பல் துலக்கும் முன்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மூன்றுவேளையும் உணவு உண்ட பிறகு இவ்வாறு செய்வது சிறப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for cavities

Home Remedies for cavities
Desktop Bottom Promotion