குதவழி உடலுறவால் ஏற்படும் ஆரோக்கிய கெடுதல்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

உடலுறவில் ஈடுபடுவது உயிரினங்களின் இயற்கை. ஆனால், அதில் பல்வேறு நிலைகள், வழிகள் உண்டாக்கி இன்பம் காண்பது மனிதரின் சிற்றின்பம். அதில் குதவழி செக்ஸ் எனப்படும் பிட்டம் வழியாக உடலுறவில் ஈடுபடுவதில் சிலர் ஆர்வம் காண்பிப்பது உண்டு.

இப்படி உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இல்லை என்பதே பெரும்பாலானோர் இதில் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் குதவழி உடலுறவில் ஈடுபடுவதால் பல ஆரோக்கிய கெடுதல்கள் உண்டாகும் என எச்சரிக்கின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறைகள்!

முறைகள்!

  1. ஆசனவாயில் ஆணுறுப்பை நுழைப்பது,
  2. செக்ஸ் பொம்மைகள், கைவிரல்கள் பயன்படுத்துதல்,
  3. வாய் அல்லது நாக்கு பயன்படுத்தி தூண்டுதல் ஏற்படுத்துவது.

இவற்றின் மூலமாக குதவழி உடலுறவில் ஈடுபடும் போது ஆரோக்கிய கேடுகள் உண்டாகலாம்.

ஆசனவாய் பாதிப்பு!

ஆசனவாய் பாதிப்பு!

குதவழி உடலுறவில் ஈடுபடுவதன் காரணத்தால் ஆசன வாய்ப்பகுதியின் தசைகள், திசுக்கள் பாதிப்படைகிறது. இதனால் வைரஸ் தொற்றுக்கள், மலம் கழிக்கும் போது சிக்கல்கள், வலி உண்டாகும்.

சுருக்குத்தசை!

சுருக்குத்தசை!

ஆசன வாயானது மலத்தை பிடித்து வைக்கும் வகையில் வடிவமைப்பு கொண்டிருக்கும். அங்கே வளையம் போன்ற ஒரு தசை இருக்கும். அது மலம் கழித்த பிறகு மூடிக் கொள்ளும். ஆனால், குதவழி உடலுறவில் ஈடுபடுவது மலத்தை பிடித்துக் கொள்ளும் தசையில் பாதிப்பை உண்டாக்கும்.

நோய்கள்!

நோய்கள்!

குதவழி உடலுறவில் ஈடுபடுவதால் ஹெப்படைட்டஸ் B, A, சிபிலிசு, எச்.ஐ.வி, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், கொனோரியா, கிளமீடியா, ஹேமோபிலிசு டுக்ரீயி, சால்மோனெல்லா, ஷிகல்லா மற்றும் குடல்நோய் தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

கருத்தரிப்பு...

கருத்தரிப்பு...

குதவழி உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இல்லை என கருதுகின்றனர். ஆனால், விந்து குதத்தில் இருந்து சிந்தி யோனியின் சேர்ந்து கருத்தரிக்கும் வாய்ப்புள் மிக குறைவாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாத்தல்?

பாதுகாத்தல்?

குதவழி உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்..,

  • ஆணுறை பயன்படுத்த வேண்டும்.
  • குதவழி உடலுறவிற்கு பிறகு, இயல்பு வழியில் ஈடுபடும் போது வேறு புதிய ஆணுறை பயன்படுத்த வேண்டும்.
  • குதவழியில் ஈடுபடும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டால் உடனே நிறுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Risks of Anal Sex!

Health Risks of Anal Sex!