For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்!

நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்

By Lakshmi
|

நவராத்திரி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று புராணம் கூறுகின்றது. இந்த விரதம் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. விரதம் இருப்பது பல மதங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த விரதம் மூலமாக நாம் பல ஆரோக்கிய பலன்களை பெற முடிகிறது. மனித வரலாற்றில் விரதம் என்பது தெய்வ காரியங்களுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால் இந்த விரதமானது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கிறது. சிலர் உணவு, தண்ணீர் என எதையுமே எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருக்கின்றனர். ஆனால் சிலர் தண்ணீர் மட்டுமே அருந்தியும் விரதம் கடைப்பிடிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் விரதம் இருக்கின்றோம்?

ஏன் விரதம் இருக்கின்றோம்?

விரதம் இருப்பதினால், செரிமானமாக நமது உடலில் எந்த உணவும் இருக்காது. இதனால் உணவை செரிக்க எந்த சக்தியும் தேவைப்படுவதில்லை. உணவை செரிக்க பயன்படுத்தப்படும் சக்தியானது உடலின் பிற உறுப்புகளை சரியாக இயங்க வைப்பதற்காக செலவிடப்படுகிறது.

இதனால் உடலின் திறன் மற்றும் செயல்பாடு அதிகரிக்கிறது. நீங்கள் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன.

ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது

ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது

தண்ணீர் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நிறைய தண்ணீர் குடிப்பதால், செரிமானம், இரத்த ஓட்டம் ஆகியவை முறையாக நடைபெறுகின்றன. தண்ணீரை போதுமான அளவு குடிக்காமல் இருந்தால், சருமம் வறண்டு காணப்படும். தண்ணீர் அதிகமாக குடிப்பது பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும்.

கழிவுகளை வெளியேற்றுகிறது

கழிவுகளை வெளியேற்றுகிறது

ஒரு நாளைக்கு ஒருவர் 8 டம்ளர் அளவு தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. உடல் சுத்தமாகிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் முகம் பிரகாசமாக காணப்படும்.

முதுமை தேற்றத்தை தடுக்கிறது

முதுமை தேற்றத்தை தடுக்கிறது

தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாக, தோல் சுருக்கம், முதிர்ச்சியான தோற்றம் போன்றவற்றை தள்ளிப்போட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முகப்பருக்களை நீக்குகிறது

முகப்பருக்களை நீக்குகிறது

தண்ணீர் அதிகமாக குடிப்பதால், முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படுகிறது. முகத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் முகத்தில் பருக்கள் வராது.

பசி மற்றும் சோர்வு

பசி மற்றும் சோர்வு

நீங்கள் முதல் முறையாக தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பதாக இருந்தால், உங்களுக்கு ஒரு விதமான அசௌகரியம் உண்டாகலாம். சாப்பிடாமல் இருப்பதால், தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம்.

சிறிய சோர்வு

சிறிய சோர்வு

தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பதால், சிறிது நேரத்திற்கு மட்டுமே சோர்வு ஏற்படும். ஆனால் இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

காலம் தேவைப்படும்

காலம் தேவைப்படும்

நீங்கள் விரதத்தின் பலன்களை முழுமையாக பெற சில காலம் ஆகும். நீங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்ப்பது கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of navratri fasting

Health Benefits of navratri fasting
Desktop Bottom Promotion