For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க தினமும் காலை இதைச் சாப்பிடுங்க!

துளசி இலைகளை விடியற்காலையில் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைத்திடும் பலன்கள்

|

உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளிசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.

இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.

இதயம் :

இதயம் :

இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.

துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

புற்றுநோய் :

புற்றுநோய் :

துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.

இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.

கிட்னி கற்கள் :

கிட்னி கற்கள் :

தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.

கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.

துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.

கெட்ட நாற்றம் :

கெட்ட நாற்றம் :

உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.

துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.

தலைவலி :

தலைவலி :

சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .

பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.

அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.

உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருமல் :

இருமல் :

இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

கண்கள் :

கண்கள் :

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Eating Tulsi Leaves in Early Morning

Health Benefits of Eating Tulsi Leaves in Early Morning
Story first published: Thursday, November 30, 2017, 16:04 [IST]
Desktop Bottom Promotion