For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி தலைவலியால் அவதியா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இது!

அடிக்கடி தலைவலியால் அவதியா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இது!

By Lakshmi
|

இன்றைய காலகட்டத்தில் தலைவலி என்பது மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து டிவி, செல்போன் மற்றும் கணினியை பார்த்துக் கொண்டே இருப்பதாலும் கூட தலைவலி உண்டாகிறது. அதுமட்டுமல்லாம ஒற்றை தலைவலி கூட இன்று பலருக்கும் இருக்கும் ஒன்றாக உள்ளது. ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்னர் தலைவலி வருகிறது. கருத்தடை மாத்திரைகளாலும், புளித்த வெண்ணெய், காரம், புளி, உப்பு, எண்ணெய், உணவு சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் தலைவலி அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழக்கங்கள்

பழக்கங்கள்

சரியாக தூங்காமல் இருப்பது, மன அழுத்தம், மது அருந்துதல் போன்ற காரணங்களால் தலைவலி உண்டாகிறது. சிலருக்கு வாசனை திரவியங்களாலும் தலைவலி வருகிறது. பரம்பரை பரம்பரையாகவும் சிலருக்கு தலைவலி உண்டாகலாம். பெண்களைவிட ஆண்களுக்கு தான் இந்த தலைவலி அதிகமாக வருகிறது.

மருத்துவரின் பரிந்துரை

மருத்துவரின் பரிந்துரை

மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தான் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். முறையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

தூங்குதல்

தூங்குதல்

ஓய்வு நேரத்தை முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். தூங்கும் நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முறையாக தூங்கி முறையான நேரத்தில் எழுதல் என்பது அவசியமாகும்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல்

தலைவலிக்கு ஆவி பிடித்தலும் கூட ஒரு நல்ல நிவாரணத்தை தரும். எனவே தலைவலி உள்ள காலங்களில் ஆவி பிடிக்கலாம். அதே சமயத்தில் தலைவலி தொடரும் பட்சத்தில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

இஞ்சி சாறு

இஞ்சி சாறு

தலைவலி நீங்க இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் தலைவலி நீங்கும்.

அகத்தி இலை சாறு

அகத்தி இலை சாறு

அகத்தி இலை தலைவலிகளை நீங்க உதவும் இரு அருமருந்தாகும். நீங்கள் அகத்தி இலையில் இருந்து சாறு எடுத்து அதனை நெற்றியில் தடவி வந்தாலும் தலைவலி நீங்கும்.

சுக்கு

சுக்கு

சிலவகையான வாசனைகளும் கூட தலைவலிக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். எனவே நீங்கள், சுக்குத் தூள், சீந்தில் கொடி, தேன் சர்க்கரை ஆகிய மூன்றையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துத் துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம்.

ஒற்றை தலைவலியா?

ஒற்றை தலைவலியா?

குளிர்ந்த நீரைத் துண்டில் நனைத்துத் தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும்.

நொச்சி இலை

நொச்சி இலை

நொச்சி இலைகளும் தலைவலிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.

கடுக்காய்

கடுக்காய்

பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.

மகிழம் பூ

மகிழம் பூ

மகிழம் பூவின் பொடி தலைவலியை போக்க உதவுகிறது. நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் தூளாக்கிச் சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து முகரத் துர்நீர் பாய்ந்து வந்து தலைவலியைப் போக்கும்.

வில்வ இலைகள்

வில்வ இலைகள்

வில்வ இலைகளை அரைத்து, சாப்பிடுவதாலும் கூட இந்த தலைவலி தீரும். வில்வ இலைகளை அம்மியில் அரைத்துத் தினமும் சுண்டைக்காய் அளவு 20 நாட்கள் சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

வெற்றிலை

வெற்றிலை

தலைவலிக்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. வெற்றிலையை கொண்டு தலைக்கு பற்று போடுவதாலும் கூட தலைவலி நீங்குகிறது.

மருதோன்றி இலை

மருதோன்றி இலை

மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை எனவும் கூறப்படுகிறது.

எருக்கு

எருக்கு

வெள்ளை எள்ளை, எருமைப் பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலையில் முன் நெற்றியில் பற்று போட்டு உதயசூரியன் ஒளியில் லேசாகக் காட்டிவரலாம். இவ்வாறு செய்து வருவதாலும் தலைவலி குணமாகும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி

இஞ்சி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Home Remedies for headaches

Easy Home Remedies for headaches
Story first published: Tuesday, December 26, 2017, 18:59 [IST]
Desktop Bottom Promotion