For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம் என்று நினைத்து நீங்கள் செய்யும் தவறுகள்!

பற்களின் ஆரோக்கியம் சீர்கெட நீங்கள் செய்யும் தவறுகள்!

|

பற்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். நன்கு உணவை மென்று விழுங்கினால் மட்டும் போதாது, அதை இரண்டு பக்கமும் நன்கு மெல்ல வேண்டும். ஒரு பக்கம் உணவை மென்று உண்பதால் கூட உங்களுக்கு பல் வலி ஏற்படலாம் என உங்களுக்கு தெரியுமா?

Biggest Mistakes You Doing For Your Teeth!

காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷை பல நிமிடங்கள் எழுத்தும் கொடுத்து தேய்த்து பல் துலக்குவதில் இருந்து ஒரு நாளில் நாம் ஆரோக்கியம் என்று செய்யும் ஒருசில தவறுகளால் பற்களின் வலிமை மற்றும் ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பிரஷ்!

டூத் பிரஷ்!

பல் துலக்கும் போது நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு இது. டூத் பிரஷை ஏதோ சுண்ணாம்பு அடிப்பது போல பற்களில் அழுத்தம் கொடுத்து தேய்ப்போம். இதனால் உங்கள் ஈறுகள் மற்றும் பற்களின் எனாமல் தாம் பாதிப்படையும். எனவே, மென்மையாக மெதுவாக பல் துலக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பழங்கள்!

பழங்கள்!

நமது பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் சாப்பிட வேண்டும். முக்கியமாக கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ப்ளோரின் மிகவும் அவசியம். மேலும் பழங்களின் தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லது.

கால்சியம்: பால் உணவுகள், பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் பீன்ஸ்

பாஸ்பரஸ்: மீன், நட்ஸ் மற்றும் பயிறு வகை உணவுகள்.

ப்ளோரின்: பால் உணவுகள், உப்பு....

மஞ்சள் கறை!

மஞ்சள் கறை!

பற்களின் முன்னாலும், பின்னாலும் மஞ்சள் கறை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. முன்னே இருக்கும் மஞ்சள் கறையை வேண்டுமானாலும் முழுமையாக போக்கலாம். ஆனால், பின்னே படியும் கடினமாக மஞ்சள் கறையை முற்றிலுமாக போக்க முடியாது.

நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்துக் கொள்ளுங்கள்.

டென்டல் ப்ரேஸ்!

டென்டல் ப்ரேஸ்!

பற்கள் சீராக இல்லாமல் முன்னும், பின்னுமாக இருந்தால் அதை சீராக்க ப்ரேஸ் மாட்டிக் கொள்ளலாம். சிலர் இது பேசும் போது அசிங்கமாக இருக்கும் என கருதுவார்கள். ப்ரேஸ்-ல் மற்றுமொரு வகையும் இருக்கிறது, அது பற்களின் பின்னாடி மாட்டும் வகை. இதனால் உங்கள் அழகான சிரிப்பிற்கு எந்த பங்கமும் ஏற்பட்டுவிடாது.

மென்று சாப்பிட வேண்டும்!

மென்று சாப்பிட வேண்டும்!

உணவு உண்ணும் போது சிலர் ஒரு பக்கமாக மட்டும் மென்று சாப்பிடுவார்கள், இது தவறு. மென்று சாப்பிடுவதால் வாய் பகுதி தசைகளும் ஆரோக்கியம் அடைகின்றன. ஒரு பக்கமாக மட்டும் மென்று சாப்பிடுவது மறுப்பக்கம் வலி உண்டாக அல்லது பற்கள் வலிமையின்றி போக காரணமாகிவிடுகிறது. உங்கள் பல் வலிக்கு இது கூட காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள்!

குழந்தைகள்!

குழந்தைகளின் பற்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர் சரியாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் தான் அதிகமாக சொத்தை பல் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, ஐந்தாறு வயது வரை குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்களது பற்களின் ஆரோக்கியம் குறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Biggest Mistakes You Doing For Your Teeth!

Biggest Mistakes You Doing For Your Teeth!
Desktop Bottom Promotion