For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

|

இந்த சீசனில் எல்லாருக்கும் காய்ச்சல், மூக்கடைப்பு,தலைவலி ஏற்படக்கூடும். லேசாக உடல் நலமில்லை என்றாலே பெரும் தொல்லையாய் அது மாறிடும்.ஆம், ஒரு வேலையையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்திட முடியாது. எப்போதும் ஒரு சோர்வு ஆட்கொண்டிருக்கும்.

உணவே மருந்து என்பது எப்போது நம்புகிறீர்களோ இல்லையோ இந்த நேரத்தில் நீங்கள் நிச்சயமாக நம்பக்கூடும். ஆம், உங்களை எழுந்து உட்காரச் செய்வதும் மேலும் மேலும் சோர்ந்து படுக்கச் செய்வதும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் தான் இருக்கிறது.

உடல் நிலையில் லேசாக முன்னேற்றம் தெரிந்தாலே... அதான் சரியாகிவிட்டதே என்று சொல்லி நீங்கள் கண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் அவை உங்கள் உடல்நலனை கேள்விக் குறியாக்கிடும். அதனால் கூடுதல் கவனமாகவே இருங்கள்.சரி, இப்போது உங்களுக்கு உடல் நலம் சரியில்லை எனும் போது சாப்பிடக்கூடாத, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமில உணவுகள் :

அமில உணவுகள் :

நமது உணவுப் பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை குறைத்துக் கூட்டும் தன்மை கொண்டவை. எல்லா உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு அமிலங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதிக அளவு அமிலம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

அமிலம் அதிகரிப்பதால் நச்சுகளை அகற்றும் தன்மை உடலுக்குள் குறைந்துவிடுகிறது. இதனால் நோய்த் தாக்குதல்கள் தொடங்குகின்றன. சருமம் பொலிவு குறைவது, முடி உலர்ந்து காணப்படுவது, நகம் உடைதல் போன்ற அறிகுறிகள் அமிலத்தன்மை அதிகரித்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகளாகும்.

மது :

மது :

பெரும்பாலானோர் செய்கிற தவறுகளில் இதுவும் ஒன்று. உடல் சோர்ந்திருக்கும் போது, எனக்கு அடக்க முடியாத கவலை இருக்கிறது அதனால் தான் எந்த வேலை செய்யவும் எனக்கு விருப்பமில்லாமல் சோர்வாகவே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்காக, உங்களின் ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இது போன்ற நேரத்தில் மது குடிப்பதை அறவே தவிர்த்திடுங்கள். மது, உங்களின் நோய் எதிர்க்கும் ஆற்றலை சீர்குலைத்திடும்.

கேஃபைன் :

கேஃபைன் :

புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம். இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.

காஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்னை வரலாம்.

கேஃபைனின் அளவு அதிகரித்தால் படபடப்பு, ரத்தஅழுத்தம், வாந்தி, வலிப்பு, அதிகப் பட்சமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்துவரை நேரலாம்.

வறுத்த உணவுகள் :

வறுத்த உணவுகள் :

ருசிமிக்க உணவாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் இருப்பதால் நாக்கிற்கு அடிமையாகி அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இது உங்கள் உடலை சீர்குலைக்கக்கூடியது.

வறுத்த உணவு அதிகம் சாப்பிடுவதால், நமது உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. இதன் காரணத்தால், உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு இதய பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது. இது செரிமானத்திற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது அதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

ஐஸ் க்ரீம் :

ஐஸ் க்ரீம் :

ஐஸ் க்ரீம் நம் உடலுக்கு நன்மையும் தீமையும் கலந்து தரக்கூடியது... ஆனால், தீமைகளின் அளவு கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகக் கொழுப்புள்ள பால், க்ரீம் கலவையைக் கடைந்து, குளிரூட்டி தயாரிக்கப்படுவது ஐஸ்க்ரீம்.

`கார்ன் சிரப்' என்ற வடிவில் ஃப்ரக்டோஸ் (Fructose) அல்லது குளூக்கோஸ் இனிப்புகள் இதில் சேர்க்கப்படுகின்றன. சுவை மற்றும் வாசனைக்காக வெனிலா, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்களும் கலக்கப்படுகின்றன. இந்தக் கலவை ஜில்லென்று ஆகும்போது குழைந்த க்ரீமாகிறது.

 ஒன்றரை கப் பாலில் இருப்பதை விட அதிகம் :

ஒன்றரை கப் பாலில் இருப்பதை விட அதிகம் :

பொதுவாக ஐஸ் க்ரீம், நம் உடலுக்கு சக்தி தரும் ஒன்று. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அதாவது, ஒன்றரை கப் (சிறிய அளவு) ஐஸ் க்ரீமில், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

அதோடு இதில் உள்ள 7 கிராம் கொழுப்பு, 2 கிராம் புரோட்டீன் ஆகியவையும் சேர்ந்து நம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியவை. 137 கலோரி இதில் இருக்கிறது. சுருக்கமாக, ஒன்றரை கப் பாலில் இருக்கும் கலோரியைப்போல இரு மடங்கு!

பாதிப்புகள் :

பாதிப்புகள் :

இதில் பால் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இது ஒரு நிறைவுற்ற கொழுப்பு. ஒருவருக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பட்சத்தில், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.

இதயக் கோளாறுகள், பக்கவாதம் ஆகியவை வருவதற்கும் வழிவகுக்கும். அதோடு சர்க்கரை, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவும் இதில் அதிகம்.

இனிப்பு :

இனிப்பு :

அதிக இனிப்பு சேர்க்கும் உணவுகளை எடுக்க வேண்டாம். அதேபோல செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது. ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக பழங்களை அப்படியேச் சாப்பிடுங்கள்.

ஜூஸ் மட்டுமே குடிக்கவேண்டிய சூழ்நிலை எனும் பட்சத்தில் சர்க்கரை சேர்க்காமல் குடித்திடுங்கள்.

அதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் உங்கள் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

வயிறு பிரச்சனைகள் :

வயிறு பிரச்சனைகள் :

பிற உடல்நலமின்மைக்கும் இது பொருந்தும் என்றாலும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது தான் நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

இதனை செரிக்க அதிகப்படியான என்சைம்ஸ் தேவைப்படும். ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கும் போது, இது பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திடும்.

சோடா :

சோடா :

உணவு செரிக்கவில்லை என்றாலே உடனடியாக சோடா வாங்கி குடிக்கும் பழக்கம் இன்று நம்மிடையே நிறைய பேருக்கு இருக்கிறது.

பெரும்பாலான சோடா பானங்கள் "ஹை ஃபிரக்டோஸ் காரன் சிரப்" கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இது, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உங்கள் உடலுக்கு ஒட்டுமொத்தமாக ஓர் நாளுக்கு தேவையானதே 10கிராம் சர்க்கரை அளவு தான். ஆனால், நீங்கள் குடிக்கும் ஓர் சோடாவிலேயே அவை மொத்தமாய் இருக்கிறது.

தவிர்க்க காரணம் :

தவிர்க்க காரணம் :

மற்றும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்தை சீர்குலைக்க செய்கிறது. இவை இயற்கை சர்க்கரைய விட 400 - 8000 மடங்கு அதிக சுவையை ஏற்படுத்த கூடியது.இவை உடல் செல்களை வேகமாக முதிர்ச்சியடைய செய்கிறது.

சோடாவில் இருக்கும் அமிலத் தன்மை உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது. பற்களின் எனாமலையும் பாதிக்கிறது. மற்றும் செயற்கை இனிப்பூட்டியும், அமிலத்தன்மையும் நமது உடல்நலனுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. இதனால் நிறைய உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

மசாலா உணவுகள் :

மசாலா உணவுகள் :

உடல் நலமின்மையின் போது சுவை அவ்வளவாக தெரியாது. எதாவது காரமாக சாப்பிட வேண்டும், மசாலா உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும், அதற்காக மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளதீர்கள். இது செரிமானத்தை தாமதப்படுத்தும். அதனால் மேலும் உங்கள் உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்திடும்.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்கள் :

உடல் நலமின்மை என்றால் எல்லாரும் பழங்களைத் தான் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். பழங்களை எடுத்துக் கொள்ளும் போதும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்நேரத்தில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனை இருந்தால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பதுவே உங்களுக்கு நல்லது.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் :

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் :

காய்ச்சல் தவிர வயிற்று வலி உட்பட சில பிரச்சனைகள் சேர்ந்து இருந்தால் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை விட, வயிற்றில் கேஸ் உற்பத்தியை அதிகரிக்கச் செய்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid These Foods When You Are Sick

Avoid these foods when you are sick
Story first published: Tuesday, December 5, 2017, 14:55 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more