For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதிப்படைந்த கல்லீரலின் 12 அறிகுறிகள் பற்றி தெரியுமா?

கல்லீரல் பாதிப்ப்டைந்தால் தென்படும் அறிகுறிகள் பற்றி இங்கே தெரிந்து சொல்லப்பட்டிருக்கிறது.

By Peveena Murugesan
|

கல்லீரல் உங்கள் அடி வயிற்று பகுதியின் வலது மேல் பகுதியில் அமைந்துள்ளது மற்றும் கல்லீரலைப் பாதுகாக்க விலா அமைந்துள்ளது.உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு கல்லீரல் மிகவும் முக்கியமானது.கல்லீரல் இன்றி உடலின் பல இயக்கங்கள் தடைபட்டு நம்மால் வாழ முடியாது.

எனவே தான் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் கல்லீரலை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்றும் கல்லீரல் சேதமடைய ஆரம்பிப்பதை குறிக்கும் அறிகுறிகள் தென்பட்டால் அதை பெரிதாக எடுக்காமல் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் கூறுகின்றனர்.நீங்கள் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.

12 symptoms that reveal your liver is damaged

குறிப்பு:கல்லீரலில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.ஒவ்வொரு நோயும் தனிப்பட்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளது.அவற்றில் மதுவினால் ஏற்படும் நோய்,ஈரல் அலர்ஜி,கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஈரல் நோய் ஆகியவை அடங்கும்.கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் எளிதாக கண்டறியும்படியும் மற்றும் வெவ்வேறு நிலைகளிலும் காணப்படும்.

இதைக் கண்டு கவலைப் பட வேண்டாம்.ஏனெனில் இந்த கட்டூரையில் கல்லீரல் சேதமடைந்துள்ளதை பற்றியப் பொதுவான அறிகுறிகளைக் குறிப்பிட்டுள்ளோம்.மேலும் நாம் சொன்னது போல் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இந்த எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டதும் நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை:

முதலில் ஒரு எளிய கேள்வி:மஞ்சள் காமாலை என்றால் என்ன என்று தெரியுமா?

அதற்கு எளிதான பதில்:தோல்,நாக்கு,விரல் மற்றும் கண்கள் இவை மஞ்சள் நிறமாக மாறும்.ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகரித்தால் இது ஏற்படும்.இந்த பிலிரூபின் பழைய ரத்த சிவப்பணுக்கள் கல்லீரலில் உடைக்கப்படும் போது உருவாகிறது.இதனால் தோலை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.இந்த மஞ்சள் காமாலை கணையம் (அ) பித்தப்பையில் ஏற்படும் பிரச்சனைகளாலும் ஏற்படும்.எனவே இந்த அறிகுறி ஏற்பட்டால் விரைவில் மருத்துவ கவனிப்பைப் பெற வேண்டும்.

வயிற்று வலி:

வயிற்று வலி:

கல்லீரல் அமைந்துள்ள பகுதியில் வலது பக்கத்தில் மேல் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் வலி ஏற்படும்.

சிறுநீர் நிறம் மாற்றம்:

சிறுநீர் நிறம் மாற்றம்:

நீங்கள் தினமும் போதுமான அளவு நீர் குடித்தாலும் சிறுநீர் டார்க் நிறமாக வெளியேறினால் அலட்சியம் காட்டாதீர்கள்.ஏனெனில் இதுதான் கல்லிரல் சேதம் அடைய ஆரம்பிப்பதற்கு ஆரம்ப அறிகுறி.சிறுநீர் நிறம் பழுப்பு,ஆம்பர் (அ) ஆரஞ்சு நிறங்களாக இருக்கலாம் ஏனெனில் ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகமான அளவாக இருப்பதே காரணம்.

கல்லீரல் பிலிரூபினை வெளியேற்ற முடியாது எனவே பிலிரூபின் அளவு அதிகமாகி கொண்டே போகும்.சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீர் டார்க் நிறமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அவை:உடலில் ஏற்படும் நீர் வறட்சி,அதிகமாக ஆன்டி பயாட்டிக்குகள் எடுப்பது,வைட்டமின் பி சத்து நிறைந்த மாத்திரைகளை எடுப்பது,சிறுநீரக குழாய் தொற்று,நொதி குறைபாடுகள் (அ) சிறுநீரக குறைபாடுகள் ஆகும்.

பசியின்மை:

பசியின்மை:

பசி ஏற்படவில்லை எனில் உணவில் உள்ள கொழுப்பை ஜீரணிக்க தேவையான பித்தம் இல்லாததால் உணவு அப்படியே தங்கி விடுவதே காரணம்.எனவே பசி ஏற்படாது.எடை இழப்பும் ஏற்படும்.நீண்ட காலம் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அணுகுங்கள்.

நீர் கோர்த்தல்:

நீர் கோர்த்தல்:

இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லீரல் பாதிப்பு அடைந்தால் கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி வீங்கி காணப்படும்.இவ்வாறு நேர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

திரவங்கள் வெளிப்புற திசுக்களில் தேங்குவதால் வீக்கம் ஏற்படும்.சிறுநீரகக் கோளாறுகள்,ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள்,இதய செயலிழப்பு மற்றும் நிணநீர் நோய் போன்ற காரணங்களாலும் நீர் தேங்கிவிடும்.

தோலில் அரிப்பு:

தோலில் அரிப்பு:

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக மாறிவிடும்.எனவே தோலில் அரிப்பும், தோல் வறண்டும் காணப்படும் மற்றும் நரம்புகள் வெளிப்படையாகக் காணப்படும்.

லோஷன் கொண்டு தோலை ஈரப்பதமாக வைக்க முயற்சிக்கலாம் ஆனால் இந்த அரிப்பு,வறட்சி ஆகியவை கல்லீரல் பிரச்சனையைக் கண்டறிந்து குணமாக்கும் வரை நல்ல தீர்வு கிடைக்காது.

மலத்தில் நிற மற்றம்:

மலத்தில் நிற மற்றம்:

கல்லீரல் பாதிக்கப்படும் போது இது போதுமான பித்த நீரை உற்பத்தி செய்யாது இதனால் மலத்தில் நிற மாற்றம் ஏற்படும்.இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

களைப்பு மற்றும் பலவீனம்:

களைப்பு மற்றும் பலவீனம்:

கல்லீரல் பாதிப்புக்கு இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லிரல் சரியாக இயங்கவில்லை எனில் உடல் கடினமாக இயங்க வேண்டும்.எனவே அதிக ஓய்வு தேவைப்படும்.ரத்த ஓட்டத்தில் நச்சுக்கள் அதிகரித்து விடுகிறது.கல்லீரல் சரியாக இயங்காததால் நச்சுக்கள் வெளியேற்றப்படாமல் உடலில் தங்கி விடுகின்றன.

இவ்வாறு ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 symptoms that reveal your liver is damaged

12 symptoms that reveal your liver is damaged
Story first published: Tuesday, March 28, 2017, 14:29 [IST]
Desktop Bottom Promotion