For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மருத்துவரிடம் நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் !!

|

மருத்துவரிடம் உண்மையே சொல்ல வேண்டும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் எத்தனையோ கேள்விகள் உங்கள் மனதில் தோன்றும். ஆனால் டாக்டரிடம் பரிசோதித்தபின் இதை கேட்க மறந்துவிட்டோமே என பல சமயம் நினைப்பதுண்டு.

நீங்கள் மறக்காமல் மருத்துவரிடம் கேட்க வேண்டிய பல கேள்விகள் இருக்கின்றன. மருத்துவர் எதுவும் சொல்லவில்லை. எனவே எதுவும் பிரச்சனை இருக்காது என பல பிரச்சனைகளை கோட்டை விட்டவர்கள் நிறைய உண்டு.

ஏனென்றால் மருத்துவரை காண பல நோயாளிகள் வருகிறார்கள். எல்லாரிடம் நிதானமாக பேச அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் உங்கல் உடல் நலம் உங்களுக்கு முக்கியம் என்ற நோக்கத்தில் அவர்களிடம் கட்டாயம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அவை எவை தெரியுமா? மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை பற்றி :

உடல் எடையை பற்றி :

மருத்துவர் உங்கள் எடையை சரி பார்த்ததும் அவர் எதுவும் சொல்லவில்லையென்றால் "நமது எடை சரியாக இருக்கிறது,. அதான் அவர் எதுவும் சொல்லவில்லை" என நினைக்காதீர்கள்.

2010 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, மருத்துவர்கள் சரியாக BMI கணக்கிடாததால்தான் உடல் பருமன் பல நோயாளிகளுக்கு அதிகரித்ததாக ஒரு சர்வே சொல்கிறது.

வழக்கத்திற்கு மாறாக உடல் எடை குறைந்தாலோ அதிகரித்தாலோ மருத்துவருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே கட்டாயம் அதனை சொல்ல வேண்டும். அதோடு BMI பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

மருத்துவர் கை கழுவினாரா?

மருத்துவர் கை கழுவினாரா?

மருத்துவர் உங்களிடம் "உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்" என சொல்லப் பாத்திருப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்வதால் அவர்களும் அப்படியே கழுவார்கள் என நினைக்காதீர்கள்.

வெறும் 30%- 40 % மருத்துவர்களே நோயாளியை பரிசோதித்தபின் கை கழுவுகிறார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே ஒவ்வொரு நோயாளியை பரிசோதித்தபின் மருத்துவர் கை கழுவிகிறாரா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நர்ஸ் பரிசோதனை செய்கிறாரா?

நர்ஸ் பரிசோதனை செய்கிறாரா?

சில இடங்களில் நேரம் மற்றும் மருத்துவர் இல்லாத நேரங்களில் செவிலியரை பரிசோதனை செய்ய வைப்பார்கள். சாதரண காய்ச்சல், இருமலுக்கு அவர்களே மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள்.

அவ்வாறான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால் இதற்கு கண்டிப்பாக இடம் கொடுக்காதீர்கள். இது தவறு. செவிலியர்கள் சேவை மட்டுமே செய்ய முடியுமே தவிர, இன்ன நோயென்று பரிசோதனை செய்ய முடியாது.

கூகுள் ஆப்பை பற்றி :

கூகுள் ஆப்பை பற்றி :

இப்போது சின்ன நோய் அல்லது பிரச்சனை வந்தாலும் அதனைப் பற்றி தெளிவு படுத்த கூகுளை தேடுகிறோம். இது போல் மருத்துவம் , நோய் சம்பந்தப் பட்ட பல ஆப் கூகுளில் தரவிறக்கம் செய்யப்படுகிறது.

ஜாமா பல்கலைக் கழக ஆராய்ச்சியின் படி 58 % பல நோய் மற்றும் அறிகுறிகளை , கூகுள் ஆப் சரியாக கணித்து சொல்கிறது. ஆகவே அவ்வாறான கூகுள் ஆப்பை பயன்படுத்தலாமா என உங்கள் மருத்துவரை கேட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்.

 சன் ஸ்க்ரீன் உபயோகம் பற்றி :

சன் ஸ்க்ரீன் உபயோகம் பற்றி :

சூரிய புற ஊதாக்கதிர்களால் பல ஆபத்தான பாதிப்புகள் புற்று நோய் தடுக்க சன் ஸ்க்ரீன் உபயோகப்படுத்துதல் நல்லது. ஆனால் அதனை உபயோகிக்கச் சொல்லி வலியுறுத்தும் சரும மற்றும் பொது நல மருத்துவர்கள் வெறும் 1 சதவீதத்தினரே.

பெரும்பாலோனோர் சன் ஸ்க்ரீன் உபயோகிக்கச் சொல்வதில்லை. ஆனால் கட்டாயம் சன் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். எனவே மருத்துவரை கேட்டு எந்த மாதிரியான சன் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும் என கேட்டுப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Questions Docotors wish you would ask them

Important questions to be asked to you doctor without hesitation
Desktop Bottom Promotion