For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் எப்படியோ அப்படிதான் வெளியேயும்- உங்கள் பிள்ளைகள் !!

|

உங்களுக்கு அலுவலகத்தில் எப்போதும் ஏதாவது பிரச்சனைகள் தொடர்ந்தவாறு இருக்கிறதா? இதற்கு நீங்கள் வளர்ந்த விதமும் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனித உறவை மேம்படுத்தும் விதமாக வெளிவரும் ஹியூமன் ரிலேஷன் என்ற இதழில் இதைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது.

ஒரு அலவலகத்தில் மேனேஜருக்கும் , ஊழியருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றியும், வீட்டில் வளர்ந்த விதமும், அலுவலகத்தில் நடந்து கொள்ளும் விதமும் ஆராய்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

Parenting may also be a reason for the job headaches

ஒரு மனிதன் வளர்ந்து தவறுகள் செய்கிறானென்றால், அவனைப் பெற்ற அம்மாவைத்தான் குறை கூறுவோம். காரணம் அவள்தான் அவனுக்கு மிக நெருக்கமாக ஆரம்பித்திலிருந்து இருந்திருப்பாள். அவளைத்தான் முன்னுதாரணமாக வைத்திருப்பான்.

எது எப்படி இருந்தாலும் பெற்றோர் குழந்தைகளிடம் நடக்கும் விதம்தான், பிற்காலத்தில் அலுவலகத்திலும் சமூகத்திலும் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது என்று ஆய்வு நடத்திய அல்பாமா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பீட்டர் ஹார்ம்ஸ் கூறுகிறார்.

குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிடும்போது, பெற்றோரின் உதவிக்கு காத்திருக்கும் அல்லது, அந்த சூழ்நிலையை பெரிதாக்கி, எல்லாருடைய கவனத்தையும் தம் பக்கம் இழுக்கும்.

அந்த சமயங்களில் இந்த சூழ் நிலையை எப்படி கையாளவது என்று அந்த குழந்தைக்கு விளக்கி புரியவைப்பது ஒவ்வொரு பெற்றோரிந் கடமை. அந்த குழந்தைக்கு தன்னைத் தானே சரிபடுத்திக் கொள்ள விடாமல் ஒவ்வொரு சமயத்திலும் உதவி செய்தால், அவர்களின் தனித்தன்மை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்க வைப்பது போலாகிவிடும்.

இது அந்த குழந்தை வளர்ந்தும் தொடர்ந்தால், அலுவலகத்திலும் சமூகத்திலும் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமல் , பிறரின் உதவியை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

இப்படி பதட்டமான சரிவர கையாளத் தெரியாத ஊழியருக்கு, நல்ல ஆதரவான மேலதிகாரி கிடைத்தால், அவரை அரவணைத்துச் செல்லும் வாய்புண்டு. ஆனால் ஆதரவு தராத , கண்டிப்பாக நடந்து கொள்ளும் மேலதிகாரி கிடைத்தால், அந்த ஊழியர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பணியில் சுமாரான செயல்பாடுகள்தான் இருக்கும். இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிம்மதியில்லாத சூழ் நிலைஉருவாகும் வாய்ப்புள்ளது.. இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கூடவே இருந்து சொல்லித் தந்து நடத்திச் செல்லாதீர்கள். வழி காட்டுங்கள். அவர்கள் நடக்கட்டும்.

English summary

Parenting may also be a reason for the job headaches

Parenting may also be a reason for the job headaches
Story first published: Tuesday, July 12, 2016, 17:32 [IST]
Desktop Bottom Promotion