Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
பெண்ணுறுப்பு வலுவிழந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்!
பெண்கள், பெண்ணுறுப்பின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் சங்கோஜம் காரணமாக பெண்ணுறுப்பில் பிரச்சனை பெரிதாகும் வரை மருத்துவரிடம் காண்பிப்பது இல்லை. புண்கள், அழற்சி, எரிச்சல் என ஏதேனும் அறிகுறி தொடர்ந்து தென்பட்டால் உடனடியாக ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
ஏனெனில், பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் பின்னாளில் எதிர்வினை தாக்கங்களை உண்டாக்கினால் அது பெண்களை பெருமளவு பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியம் மட்டுமின்றி, இல்லற வாழ்க்கையையும் கூட அதிகமாக பாதிக்கலாம்.

அறிகுறிகள்!
பெண்ணுறுப்பில் எரிச்சல் / அரிப்பு
அதிகப்படியான இரத்தப்போக்கு
சிவந்து காணப்படுதல்
அழற்சி
சவ்வுகளில் வலி

அறிகுறிகள்!
புண்கள் தோன்றுதல்
பெண்ணுறுப்பில் நாற்றம்
உறவில் ஈடுபடும் போது இரத்தம் வெளிபடுதல்
பெண்ணுறுப்பில் வறட்சி,
இவை அனைத்தும், பெண்ணுறுப்பு வலுவிழந்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

செய்ய வேண்டியவை # 1
ஒருவேளை உங்கள் பெண்ணுறுப்பில் தொடர்ந்து காரணமின்றி நாற்றம் அதிகமாக வெளிப்படுகிறது எனில், முதலில் மகப்பேறு மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். ஒருவேளை பெண்ணுறுப்பில் pH அளவு 3.8 - 4.5 மேலாக சென்றாலும் நாற்றம் அதிகரிக்கலாம்.

செய்ய வேண்டியவை # 2
துரித உணவுகள், சர்க்கரை அதிகமான உணவுகள், பெப்ஸி, கோலா போன்ற சோடா கலப்புள்ள பானங்கள், போன்றவற்றை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

செய்ய வேண்டியவை # 3
பெண்ணுறுப்பு வலிமையை அதிகரிக்கும் குருதிநெல்லி பழச்சாறு மற்றும் தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஈஸ்ட் தொற்று, பெண்ணுறுப்பு வறட்சி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

செய்ய வேண்டியவை # 4
பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள். மேலும், தொற்று ஏதேனும் உண்டானது போல தெரிந்தால் அது பெரிவாதற்குள், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து சரி செய்ய பாருங்கள்.

செய்ய வேண்டியவை # 5
செயற்கை கலப்பு (சிந்தட்டிக் - Synthetic) இல்லாத, நூறு சதவீதம் இயற்கை நூலிழையில் (காட்டன்) தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அணியுங்கள். இது பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகாமல் தடுக்கும்.

செய்ய வேண்டியவை # 6
மேலும், மகப்பேறு மருத்துவர்கள் பெண்ணுறுப்பை சோப்பு எதுவும் பயன்படுத்தாமல், வெறும் நீரில் சுத்தம் செய்வதே போதுமானது என பரிந்துரை செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications
