For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் ஷிப்ட் வேலையால் டைப் டூ நீரிழிவு ஏற்படும் – ஆய்வில் எச்சரிக்கை

By Mayura Akilan
|

Diabetes
அடிக்கடி நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது.

கைநிறைய சம்பளம், வாரத்திற்கு இரண்டுநாள் விடுமுறை என கால் சென்டர் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. இளைய தலைமுறையினர் பலரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிய உடன் கால் சென்டர்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். மாலையில் வீட்டை விட்டு கிளம்பி விடிய விடிய வேலை பார்த்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும் இளம் பெண்கள் அதிகரித்துவிட்டது. இவர்கள் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் உடல் நிறைய நோயை வாங்கிக் கொள்கின்றனர் என்பது அதிர்ச்சி கரமான உண்மை.

டைப் 2 நீரிழிவு நோய்

காலை நேரத்திலும், ரெகுலர் ஷிப்ட் முறையிலும் வேலை பார்ப்பவர்களை விட முறையற்ற இரவு நேர பணிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 20 சதவிகிதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் 10 முதல் 19 ஆண்டுகள் இரவு பணி புரிபவர்களுக்கு 40 சதவிகிதமும், 20 ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேர ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு 58 சதவிகிதம் வரை டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஹெஎஸ்பிஹெச் சின் ஆசிரியர் ஆன் பான், வருடக்கணக்கில் முறையற்ற இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Rotating night shifts up diabetes risk in women | நைட் ஷிப்ட் வேலையால் டைப் டூ நீரிழிவு ஏற்படும்!

Women, who have a rotating (irregular) schedule that includes three or more night shifts per month apart from day and evening working hours in that month, may have an increased risk of developing Type 2 diabetes when compared with those who work only during day or evening.
Story first published: Thursday, December 8, 2011, 12:01 [IST]
Desktop Bottom Promotion