For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜில்லுன்னு 'சன் பாத்' எடுங்க, 'ஸ்கின் பிராப்ளம்' ஓடிடும்!

By Mayura Akilan
|

Sun Bath
ஆதி மனிதன் முதல் இன்றைய அறிவியல் மனிதன் வரை காலம் காலமாய் வியந்து வணங்கும் இயற்கை தெய்வம் சூரியன். உலகைக் காக்க ஒளி தருவதோடு, நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் விளங்குகிறது சூரிய சக்தி. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் மாலை நேரத்தில் வெற்றுடம்புடன் சூரிய ஒளியில் அமர்ந்துகொண்டிருந்தால், உடம்பின் மேற்பகுதியில் படிந்துள்ள நச்சுப்பொருள்கள் அழிந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வெளியேறும் கழிவுப்பொருட்கள்

உடலில் சேர்ந்துள்ள கழிவுப்பொருள்களை வெளியேற்ற உடல் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தான், மலம், சிறுநீர், தும்மல், கண்ணீர், வியர்வை ஆகியவை. உடலின் நச்சுக்களை வெளியேற்ற உடல் தயாராகும்போது, அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். உடலின் தன்மைக்கு ஏற்றவாறு இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். குளியலும், சூரியக்குளியலும் ஒருவகையான மருத்துவ முறையேயாகும். சொறி, சிரங்கு, படை, கட்டி, குஷ்டம் போன்ற தோலில் வரக்கூடிய நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமானால், சூரியக் குளியல் அவசியம் தேவைப்படுகிறது. மருத்துவ முறையை முறையாகத் தெரிந்து செய்தால் நோய் அகலும். நோய் வராமலும் தடுக்கலாம்.

சின்னம்மை நோய் தடுப்பு

வைரஸ் கிருமியால் பரவும் சின்னம்மை நோயை தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்னஅம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது. அது மேலும் பரவவில்லை. இதன் மூலம் சூரிய ஒளியானது வைரஸ் கிருமிகளை அழித்து அவற்றின் நோய் பரப்பும் தன்மையை கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக்குளியல் யாருக்கு எதிரி

சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம், கர்ப்பிணிப் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண், முதியோர் போன்றவர்களுக்கு சூரியக்குளியல் உகந்ததல்ல. எனவே இந்த நோய் உள்ளவர்கள் அதிக வெயில் நேரத்தில் நடமாடவே மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர்.

English summary

Sunlight As Medicine | ஜில்லுன்னு 'சன் பாத்' எடுங்க, 'ஸ்கின் பிராப்ளம்' ஓடிடும்!

In the right hands sunlight is a medicine. Throughout history it has been used to prevent and cure a wide range of diseases, and a few doctors still use its therapeutic properties to good effect. However, at the present time it is widely held amongst certain sections of the medical profession and the population at large that the damaging effects of sunlight on the skin far outweigh any benefits.
Story first published: Tuesday, December 20, 2011, 16:14 [IST]
Desktop Bottom Promotion