Latest Updates
-
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..
ஆண்களே! இந்த அறிகுறிகள் உங்ககிட்ட தெரியுதா? அப்ப உங்களுக்கு ஆபத்தான இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
Symptoms Of Testicular Cancer In Tamil: தற்போது பலவிதமான புற்றுநோய்கள் மக்களிடையே பரவி வருகிறது. அதில் ஆண்களை மட்டும் தாக்கக்கூடிய ஒரு வகையான புற்றுநோய் தான் விதைப்பை புற்றுநோய் அல்லது விதைச்சிரைப் புற்றுநோய். இதை டெஸ்டிகுலர் புற்றுநோய் என்றும் அழைப்பர். இந்த வகை புற்றுநோய் 15-35 வயதிற்குட்பட்ட ஆண்களை அதிகம் தாக்குகிறது.
பொதுவாக ஆண்களின் விதைப்பை ஒரு கோல்ப் பந்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். இது ஸ்க்ரோட்டம் என்னும் பைக்குள் இருக்கும். இந்த விதைப்பையின் வேலை விந்து மற்றும் ஆண் ஹார்மோன்களை உருவாக்குவதே ஆகும்.

விதைப்பை புற்றுநோய் என்பது ஒரு விதைப்பையில் வளரும் வீரியமிக்க கட்டிகள் ஆகும். இந்த வகை புற்றுநோய் மிகவும் அரிதானது என்றாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான டெஸ்டிகுலர் புற்றுநோய்கள் விந்தணுக்களை உருவாக்கும் செல்களில் தொடங்குகின்றன. இந்த கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரியான சிகிச்சையின் மூலம் அகற்றிவிடலாம். அதற்கு டெஸ்டிகுலர் புற்றுநோயின் அறிகுறிகளை ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
டெஸ்டிகுலர் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, டெஸ்டிகுலர்புற்றுநோயின் முதன்மையான அறிகுறி விதைப்பை சற்று கெட்டியாக இருக்கும் அல்லது கட்டி இருப்பது போன்று இருக்கும். எனவே ஆண்கள் தங்கள் விதைப்பையில் சிறு மாற்றங்களைக் கண்டாலும் அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து விட வேண்டும்.
டெஸ்டிகுலர் புற்றுநோயின் பிற அறிகுறிகள், அந்த புற்றுநோய் கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் வரை தோன்றாது. கீழே டெஸ்டிகுலர் புற்றுநோயின் பிற ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* விரைகளில் வலியில்லாத கட்டி அல்லது வீக்கம்
* விதைப்பைல் வலி, அசௌகரியம்
* விதைப்பை அதிக எடையுடன் இருப்பதை உணர்வது
* அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் லேசான வலி
* விதைப்பையில் திடீரென்று திரவம் குவிவது
* மார்பக பகுதிகளில் வளர்ச்சி
* கீழ்முதுகு பகுதியில் வலி
* மூச்சுத்திணறல்
* நெஞ்சு வலி
* இரத்தம் கலந்த சளி
* கால்களில் வீக்கம்
ஆண்களுக்கு வரும் டெஸ்டிகுலர் புற்றுநோயை தடுக்க முடியாது. ஆனால் 25 வயதிற்கு மேல் ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் விதைப்பையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்து, வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுவும் ஆண்கள் மாதந்தோறும் வீட்டிலேயே சுய பரிசோதனையை செய்ய வேண்டும்.
இந்த சோதனை செய்வதற்கு 2 நிமிடங்கள் தான் ஆகும். அதற்கு விதைப்பையை தளர்த்த வேண்டும். விதைப்பை ரிலாக்ஸாக இருந்தால் தான், அசாதாரண எதையும் எளிதில் கண்டறிய முடியும். பின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்களை விதைப்பைக்கு கீழேயும், பெருவிரலை மேலேயும் வைத்து, ஒவ்வொரு விரையையும் உருட்ட வேண்டும். அப்படி உருட்டும் போது ஏதேனும் கட்டிகளை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
டெஸ்டிகுலர் புற்றுநோய் எந்த காரணங்களால் வருகிறது?
எப்போது உள்ள செல்கள் வழக்கத்தை விட வேகமாக பெருகி கட்டிகளை உருவாக்குகிறதோ, அப்போது புற்றுநோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி செல்கள் அசாதாரண வளர்ச்சி அடைவதற்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும், பல்வேறு காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த காரணிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
வயது
ஆண்களைத் தாக்கும் டெஸ்டிகுலர் புற்றுநோயாவது பொதுவாக 15 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே இந்த வயதிற்குட்ட ஆண்கள் தங்கள் விதைப்பையின் ஆரோக்கியத்தை தவறாமல் கவனித்து வர வேண்டும்.
குடும்ப வரலாறு
உங்கள் பரம்பரையில் உள்ள ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு விதைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ன. மேலும் ஒரு விதைப்பையில் உள்ள ஒரு விரையில் புற்றுநோய் இருந்தால், மற்றொரு விரையிலும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. மேலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











