Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Teflon Flu: அமெரிக்காவில் அதிகரிக்கும் டெஃப்ளான் காய்ச்சல் - அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
Teflon Flu Rising In US: தற்போது பெரும்பாலானோரது வீட்டின் சமையலறையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒருவகையான சமையல் பாத்திரம் தான் நான்ஸ்டிக் பாத்திரங்கள். இந்த வகையான பாத்திரங்கள் சமைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் வசதியாக இருப்பதால், நிறைய பேர் தங்கள் வீடுகளில் இப்படிப்பட்ட பாத்திரங்களை அதிகம் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் நிறைய பேருக்கு இந்த வகை பாத்திரங்களில் மறைந்திருக்கும் ஆபத்து பற்றி தெரியவில்லை. அது தான் டெஃப்ளான் ப்ளூ அல்லது டெஃப்ளான் காய்ச்சல். இதை பாலிமர் புகை காய்ச்சல் என்னும் அழைப்பர்.
இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவோருக்கு இப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன என்பது தெரியுமா? பொதுவாக நான்ஸ்டின் பாத்திரங்கள் விரைவில் சூடாகிவிடும் மற்றும் இப்படியான பாத்திரங்களை எப்போதும் அளவுக்கு அதிகமாக சூடேற்றக்கூடாது. இப்படி அதிகம் சூடானால் அது நச்சுமிக்க புகையை வெளியிட்டு, அந்த புகையை சுவாசிப்போரை நோய்வாய்ப்படுத்திவிடும்.

அமெரிக்காவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக 3,6000-க்கும் அதிகமான டெஃப்ளான் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 267 டெஃப்ளான் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள விஷ மையங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக நான்ஸ்டிக் பாத்திரங்களின் மேல் ரசாயனங்கள் பூசப்பட்டிருக்கும். இந்த பாத்திரங்களை அதிகமாக சூடேற்றும் போது, அந்த பாத்திரங்களில் பூசப்பட்டுள்ள பூச்சு ஆவியாகி, அந்த புகையை சுவாசிக்கும் போது, அது உடலினுள் சென்று தீங்கை உண்டாக்கி, டெஃப்ளான் காய்ச்சலை வரத் தூண்டும். இந்த டெஃப்ளான் காய்ச்சல் வழக்குகளானது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இப்போது டெஃப்ளான் காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன மற்றும் அதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக காண்போம்.
டெஃப்ளான் காய்ச்சல் என்றால் என்ன?
டெஃப்ளான் காய்ச்சல் என்பது பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் (PTFE) பூசப்பட்ட நான்ஸ்டிக் பாத்திரத்தை அதிகமாக சூடேற்றும் போது அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இது டெஃப்ளான் ப்ளூ அல்லது பாலிமர் புகை காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. நான்ஸ்டிக் பேன்களை 500 டிகிரி F-க்கு மேல் சூடேற்றும் போது, அவை பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் (PFOA) மற்றும் பிற கெமிக்கல்கள் உட்பட நச்சுத்துகள்கள் மற்றும் வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்களை சுவாசிக்கும் போது, அவை காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
டெஃப்ளான் காய்ச்சலின் அறிகுறிகள்
டெஃப்ளான் காய்ச்சலின் அறிகுறிகளானது இந்த நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் புகையை சுவாசித்த சில மணிநேரங்களிலேயே தெரியத் தொடங்கும். அவை பின்வருமாறு:
* திடீர் தலைவலி
* காய்ச்சல் மற்றும் குளிர்
* குமட்டல்
* தொண்டைப் புண்
* இருமல் மற்றும் மூச்சுத்திணறல்
* நெஞ்சு பகுதியில் அழுத்தம் மற்றும் இறுக்கம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் குறுகிய காலம் நீடித்திருப்பதோடு, 48 மணிநேரத்திற்குள் சரியாகிவிடும். இருந்தாலும், மீண்டும் இந்த புகையை சுவாசித்தால், அது உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எப்போது இந்த காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட நேரிடும்?
டெஃப்ளான் காய்ச்சலுக்கு முதன்மையான காரணம் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக சூடுபடுத்துவதாகும். எனவே நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது, அதை கவனிக்காமல் அதிகமாக சூடுபடுத்தினால், இந்த டெஃப்ளான் காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடும். இது தவிர சேதமடைந்த அல்லது கீறல்களைக் கொண்ட நான்ஸ்டிக் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தினால், அதுவும் தீங்கு விளைவிக்கும் புகைகளை வெளியிட்டு, இந்நிலையால் பாதிக்கப்பட நேரிடும்.
டெஃப்ளான் காய்ச்சலை தடுப்பது எப்படி?
* டெஃப்ளான் காய்ச்சலின் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது, குறைந்த வெப்பநிலையில் வைத்து சமைக்க வேண்டும்.
* சமையலறை எப்போதும் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். அடைத்து வைத்தவாறு இருக்கும் சமையலறையில் சமைக்கும் போது, இதன் அபாயம் அதிகம் இருப்பதால், சமைக்கும் போது ஜன்னல்களை திறந்து வையுங்கள் அல்லது எக்ஸாஸ்ட் ஃபேன்களை பயன்படுத்துங்கள்.
* சமைக்கும் போது நான்ஸ்டிக் பாத்திரங்களை முன்கூட்டியே சூடேற்றாதீர்கள். அடுப்பில் வைத்ததும் பாத்திரத்தில் சமைக்கும் பொருட்களை உடனே பயன்படுத்தும் வகையில், அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டு சமைக்கத் தொடங்குங்கள்.
* நான்ஸ்டிக் பாத்திரங்களில் கீறல்கள் இருந்தால், அந்த மாதிரியான பாத்திரங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்படியான பாத்திரங்களில் புகை அதிகம் வெளிவர வாய்ப்புள்ளது.
டெஃப்ளான் காய்ச்சல் அறிகுறிகளை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்?
டெஃப்ளான் காய்ச்சல் அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், உடனே அந்த புகை உள்ள பகுதியை விட்டு வெளியேறி நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். அதோடு நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும். போதுமான ஓய்வை எடுக்க வேண்டும். அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications