Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
கொக்கைன் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த்: இந்த கொக்கைன் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?
Tamil Actor Srikanth Arrested: தமிழில் ரோஜா கூட்டம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். அந்த திரைப்படத்திற்கு பின் தமிழில் பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நண்பன் என்னும் திரைப்படத்திற்கு பின் இவரது படங்கள் அவ்வளவு வெற்றி பெறவில்லை. இதனால் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் திடீரென்று கொக்கைன் என்னும் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்து விசாரித்ததில், 5 ஆண்டுகளாக கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

உலகில் ஏராளமான போதைப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கொக்கைன். இந்த கொக்கைன் என்பது ஒரு ஊக்க மருந்து. அதை மூக்கின் வழியாக உறிஞ்சவோ, ஊசி மூலமாகவோ அல்லது புகைக்கவோ செய்யலாம். மருத்துவத்தில் கொக்கைன் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்து. அதாவது மருத்துவத் துறையில் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக மருத்துவர்கள் இந்த கொக்கைனைத் தான் ஒரு வலி நிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மருந்து அமலாக்க நிர்வாகத்தின் (DEA) படி, கொக்கைன் ஒரு மோசமான போதைப் பொருளாகும். இதைப் பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல். கொக்கைன் ஒருவருக்கு உடனடியாக பரவச நிலை அடைந்த உணர்வை அளிக்கலாம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது. அதன் விளைவாக உடலினுள் பலவிதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். இப்போது கொக்கைன் உடலினுள் சென்றால் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் மற்றும் அதன் பக்கவிளைவுகள் என்னவென்பதைக் காண்போம்.
கொக்கைன் உடலினுள் எவ்வாறு செயல்படுகிறது?
கொக்கைன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும். சிலர் கொக்கைன் எடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். இன்னும் சிலர் பதட்டம், மன வலி மற்றும் பிரமைகள் போன்றவற்றை சந்திப்பார்கள். கொக்கைனில் உள்ள முக்கிய பொருளான கொக்கோ இலை, மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு தூண்டுதலாகும். இந்த கொக்கைன் உடலினுள் சென்றதும், அது முதலில் டோபமைனை குவிக்கிறது. டோபமைன் என்பது வெகுமதி மற்றும் இன்ப உணர்வுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.
டோபமைனின் இந்த குவிப்பு கொக்கைன் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான மையமாகும். டோபமைன் இப்படி குவியும் போது, திடீரென்று உடலினுள் புதிதாகக் கண்டறியப்பட்ட ஏக்கத்தை பூர்த்தி செய்ய உடல் முற்படக்கூடும். அப்போது மூளையின் நரம்பியல் வேதியியல் மாற்றப்படலாம்.
கொக்கைன் பயன்படுத்துவதால் சந்திக்கும் பக்கவிளைவுகள்
கொக்கைன் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால், உடலில் பலவிதமான பக்கவிளைவுகளை சந்திக்கலாம். அதில் சில முக்கியமான பக்கவிளைவுகளாவன:
* மூக்கில் இரத்தம் வடிதல்
* மூச்சு விடுவதில் சிரமம்
* அசாதாரண இதய தாளங்கள்
* நெஞ்சு வலி
* விரிந்த கண்கள்
* விறைப்புத்தன்மை பெறாமை
* தூக்கமின்மை
* அமைதியின்மை அல்லது பதற்றம்
* நடுக்கம்
* தலைச்சுற்றல்
* சித்த உணர்வு
* அடிவயிற்று வலி
* தசைப்பிடிப்பு
* குமட்டல்
* முதுகு அல்லது தண்டுவடத்தில் விறைப்பு
* மிகவும் குறைந்த இரத்த அழுத்தம்
* வயிற்றுப்போக்கு
அரிதான சந்தர்ப்பங்களில் கொக்கைன் பயன்பாட்டினால் திடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதுவும் இப்படியான மரணம் மாரடைப்பு அல்லது வலிப்புதாக்கத்தினால் ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











