Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கால்களில் இந்த பிரச்சனைகளை சந்திச்சா.. அத சாதாரணமாக விடாதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Symptoms Of Vitamin B12 Deficiency In Tamil: தற்போது காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டியது அவசியம்.
அப்படி உடலில் உள்ள நரம்புகள் சிறப்பாக செயல்பட தேவையான மிகவும் முக்கியமான சத்து தான் வைட்டமின் பி12. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் டிஎன்ஏ தொகுப்பிற்கு உதவுகிறது. இந்த வைட்டமின் பி12 குறைபாட்டை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. இருப்பினும் இந்த வைட்டமின் உடலில் குறைவாக இருந்தால் ஒருசில அறிகுறிகள் கால்களில் தெரியக்கூடும்.

இந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து வந்தால், இந்த வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வதோடு, அறிகுறிகள் தீவிரமாகி நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இப்போது வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கால்களில் தெரியக்கூடிய அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
கால் கூச்சம்
கால்களில் கூச்ச உணர்வை அடிக்கடி சந்திக்குறீர்களா? அதோடு அவ்வப்போது கால்கள் மரத்துப் போகிறதா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கியமான அறிகுறிகளாகும். இந்த வைட்டமின் குறைபாட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக நரம்பு சேதம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள்.
கால்களில் உள்ள சருமத்தின் நிறத்தில் மாற்றம்
உங்கள் கால்களில் உள்ள சருமத்தின் நிறத்தில் திடீரென்று ஒரு பெரிய மாற்றத்தைக் காண்கிறீர்களா? அதாவது கால்களில் உள்ள சருமம் மஞ்சள் நிறத்தில் அல்லது வெளுத்துப் போவதைக் கண்டால், அதை சாதாரணமாக எடுக்க வேண்டாம். அது உடலில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதைக் குறிக்கிறது. இந்த வைட்டமின் பி12 குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதில் உடலானது பிரச்சனையை சந்திக்கிறது. இதன் விளைவாக சருமம் வெளுத்துப் போக தொடங்குகிறது.
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
நீங்கள் வழக்கத்தை விட மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை சந்தித்தால், குறிப்பாக உங்கள் கால்களில் இப்படியான பலவீனத்தை உணர்ந்தால், அசால்ட்டாக இருக்காதீர்கள். அதுவும் உங்களால் தினசரி செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத அளவில் பலவீனத்தை சந்தித்தால், உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
சரும வெடிப்பு
கால்களில் அதிகப்படியான வறட்சியை சந்தித்து, அதன் விளைவாக கால்களில் உள்ள சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால், உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இப்படியான நிலை உடலில் போதுமான நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல் இருக்கும் போது ஏற்படும்.
அடிக்கடி விழுவது
நடந்து கொண்டிருக்கும் போதே அடிக்கடி தடுக்கி விழுவீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வைட்டமின் பி12 குறைபாட்டினால் நரம்புகள் சேதமடைவதால், சில சமயங்களில் நடப்பது, நிற்பது கூட சவாலானதாக இருக்கும். எனவே இப்படியான அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications