Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை-ன்னு தெரியுமா?
Rajinikanth Admitted in Hospital: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான நடிகர் ரஜினிகாந்த் திங்கட்கிழமை நள்ளிரவில் கடுமையான வயிற்று வலியின் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு வயிற்று வலி வர காரணம் அவரது அடிவயிற்றில் உள்ள ஒரு இரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கம் தான் காரணமாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்துக்கு டிரான்ஸ்கேதீட்டர் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் பழுதுபார்ப்பு (TEVAR) செயல்முறை செய்யப்போவதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த செயல்முறை இண்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் டாக்டர் சாய் சதீஷ் தலைமையில் நடக்கப்போவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்கேதெட்டர் எண்டோவாஸ்குலர் பெருநாடி பழுதுபார்ப்பு (TEVAR) செயல்முறை என்றால் என்ன?
டிரான்ஸ்கேதெட்டர் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் பழுதுபார்ப்பு என்பது ஒரு வடிகுழாயைக் கொண்டு வயிற்றுப் பெருநாடி அனியூரிசிம்கள் (AAAs) மற்றும் தொராசிக் அயோர்டிக் அனியூரிஸ்ம்கள் (TEVARs) ஆகியவற்றைச் சரிசெய்ய செய்யக்கூடிய ஒரு அறுவை சிகிச்சை எதுவும் இல்லாத, ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும்.
இந்த செயல்முறையின் போது அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய துளையிட்டு, அங்குள்ள தமனியின் வழியாக ஒரு வடிகுழாயின் மூலம் அனீரிஸத்திற்கு ஒரு ஸ்டென்ட் கிராஃப்டை அனுப்புவார். ஸ்டென்ட் கிராஃப்ட் என்பது ஒரு மெல்லிய உலோக பொருள் மற்றும் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்ட ஒரு குழாயாகும். இதை பெருநாடியின் உள்ளே அனுப்பி சிகிச்சை அளிப்பார். இந்த செயல்முறையானது அறுவை சிகிச்சையை விட சிறந்தது. அதுவும் வயதானவர்களுக்கு இம்மாதிரியான சிகிச்சையே சிறந்தது. இதன் செயல்முறையை மேற்கொண்டால், குறுகிய நாட்களில் வீட்டிற்கு திரும்பிவிடலாம்.
இந்த செயல்முறையை தான் ரஜினிகாந்த்துக்கு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவமனை இன்னும் வெளியிடவில்லை. விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி வீட்டிற்கு வரவேண்டுமென்று பிராத்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்தின் 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications