Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
இந்த கோடைகால தவறுகள் உங்கள் பல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.. இதை மட்டும் செய்யாதீர்கள்..!
கோடை சீசன் இப்போதுதான் தொடங்குகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்தி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் வெப்பநிலை மேலும் உயரலாம். ஆனால் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க பலர் குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை குடிப்பது வழக்கம். கோடை வெப்பம் பொதுவாக பசியை அதிகரிக்கும்.
ஆனால் களைப்பு மற்றும் சோம்பலைக் குறைக்க பலரும் பலவிதமான குளிரபானங்களை அருந்தி ஆரோக்கியத்தை பற்றி மனதில் கொள்ளாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள். இவை பல் பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றனர் பல் மருத்துவர்கள். கோடை காலத்தில் செய்யும் சில தவறுகள் மற்றும் கெட்ட பழக்கங்கள் பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். அவை என்னென்ன தவறுகள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

ஐஸ் கட்டிகள்
கோடை வெயிலில் இருந்து விடுபட பலர் பழச்சாறு குடிப்பார்கள். பழச்சாறுகள் குளிர்ச்சியாக இருக்க, ஐஸ் கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. ஜூஸ் குடிக்கும் போது ஐஸ் துண்டுகள் வாய்க்குள் போகும். அவற்றை மென்று தின்றால் பற்கள் எரியும். அவற்றின் அதீத குளிர்ச்சியானது பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதனால் பழச்சாறு குடிக்கும் போது ஐஸ் கட்டிகளை சேர்க்காமல் இருப்பது நல்லது.
கூல்ட்ரிங்க்ஸ்
கோடை சீசன் வந்துவிட்டாலே போதும், கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் க்ட்டம் அலைமோதும்.. அந்த கடையே பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் சோடாக்கள் மற்றும் கோக் போன்ற புத்துணர்ச்சியூட்டும் பானங்களின் தேவை அதிகரிக்கிறது. இந்த பானங்களை குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் அவற்றை அதிகமாக குடிக்க வேண்டாம். இந்த பானங்களில் செயற்கை சர்க்கரை மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர் உள்ளது. அவை வாயின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது படிப்படியாக பற்களில் உள்ள பற்சிப்பி அடுக்கைக் கரைக்கிறது. இதன் விளைவாக, பற்களின் செயல்திறன் குறைகிறது.
ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள்
அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதால் பற்களுக்கு இடையில் துகள்கள் சிக்கிக்கொள்ளும். சரியாக துலக்கவில்லை என்றால் அவை பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்தும். அது பல் சிதைவை ஊக்குவிக்கிறது. கோடை காலத்தில் இனிப்பு, மொறுமொறுப்பான, வறுத்த சிற்றுண்டி பொருட்களை சாப்பிடுவது வாய் ஆரோக்கியத்தை கெடுக்கும். இது பல் சொத்தைக்கு வழிவகுக்கும். வயிற்றில் அமில அளவும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படுகிறது.
உதடுகளுக்கு சன் ஸ்கிரீன் தடவுதல்
வெயிலில் செல்லும் போது உதடுகளைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகின்றனர். சன் ஸ்கிரீனில் உள்ள ரசாயனங்கள் வியர்வை வடிவில் வாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, வாய் ஆரோக்கியம் மற்றும் பல் செயல்பாடு பாதிக்கப்படலாம். அதற்கு பதிலாக வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய், நல்லெண்ணையை பயன்படுத்துங்கள்.. அப்படி இல்லையென்றால் அது எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது..
வாய் சுகாதாரமின்மை
சிலர் எப்போதும் எதையாவது சாப்பிடுவார்கள். ஆனால் தின்பண்டங்கள் அல்லது பேக்கரி உணவுகளை சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிக்கத் தவறினால், அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் அமிலத்தன்மை பற்களில் சேரும். இதன் விளைவாக பற்சிப்பி அரிப்பு, ஈறு அழற்சி மற்றும் பல் சிதைவு ஏற்படலாம். இருப்பினும் பல்வலி, பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications