Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Summer Care Tips: வெயில்காலத்தில் இந்த மசாலா பொருட்களை அதிகமா சாப்பிடுவது பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்!
மசாலா பொருட்கள் இல்லாமல் எந்த உணவும் முழுமையடைவதில்லை. மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையையும், அமைப்பையும் கொடுக்கின்றன, இது சாதாரண உணவை அசாதாரண சுவையுடைய உணவாக மாற்றும். மசாலா பொருட்கள் சுவை மட்டுமல்ல, சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குவதாக அறியப்படுகிறது.
ஆனால் கோடையில் சில மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், மசாலாப் பொருட்கள் பொதுவாக இயற்கையில் சூடான தன்மை கொண்டதால் அவை உடலில் வெப்பத்தை உண்டாக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் மிகவும் கடினமாக உள்ளது. உஷ்ணமான காலநிலை காரணமாக பெரும்பாலான மக்கள் பசியின்மை, அஜீரணம், நீரிழப்பு, எரிச்சல், சோர்வு, வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கோடை வெப்பம் உங்கள் ஆற்றல் அளவைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் உணவில் சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும்.
மிளகாய்
மிளகாய்ப் பொடி நமது உணவிற்கு காரத்தை சேர்ப்பதுடன், வண்ணம் உருவாக்கவும் பயன்படுகிறது, ஆனால் அதனை அதிகமாக சேர்ப்பது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மிளகாய் தூள் போன்ற சூடான மற்றும் காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கின்றன, இது வயிறு மற்றும் மார்பில் வியர்வை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் அதிக மிளகாய் மற்றும் மிளகாய் தூள் உள்ள உணவுகளை தவிர்க்க அல்லது மிதமாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இஞ்சி
இஞ்சி உணவுக்கு சிறந்த சுவையை சேர்க்கப்படும் சிறந்த பொருளாகும். இருப்பினும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது, இஞ்சி ஒரு சூடான மசாலாவாகும், எனவே இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது மற்றும் வியர்வையை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய், ரத்தக் கசிவு பிரச்னை உள்ளவர்கள் கோடையில் இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பூண்டு
பூண்டு எடை இழப்பு, பசியைக் குறைத்தல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறனுக்காக பயன்படுத்தப்படுகிறது, இது கோடையில் மிதமாக உட்கொள்ளப்பட வேண்டும். பூண்டு குளிர்காலத்தில் நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் கோடையில் அதை உட்கொள்வது நல்லதல்ல, ஏனெனில் இது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும், இது வாய் துர்நாற்றம், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் இரத்தப்போக்கு அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
மிளகு
மிளகு ஒரு சூடான மசாலா ஆகும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இதை கோடை காலத்தில் அதிகமாக உட்கொள்வது, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கருப்பு மிளகு உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில மருந்துகளின் விளைவையும் குறைக்கலாம். மருந்துகளுடனான தொடர்பு காரணமாக, இது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், எடை இழப்புக்கு உதவும் ஒரு மசாலாவாகும். ஆனால் இதனை கோடைகாலத்தில் மிதமாக உட்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

