Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
Summer Health Tips In Tamil: கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடைக்காலம் வந்துவிட்டால் நிறைய பேர் நீரிழப்பு, உடல் சூடு பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். எனவே இந்த கோடையில் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நீர், பழங்கள், ஜூஸ்கள் போன்றவை பெரிதும் உதவி புரியும். அதுவும் கொளுத்தும் கோடையில் தாகத்தையும், உடல் சூட்டையும் குறைக்க வெறும் நீர் மட்டும் உதவி புரியாது, அத்துடன் குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்ட பழங்களைக் கொண்டு ஜூஸ்களை தயாரித்தும் குடிக்க வேண்டும்.
அதுவும் கோடைக்காலத்தில் கிடைக்கும் சீசன் பழங்களே, இந்த கோடையில் உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளன. அந்த பழங்களை சாப்பிடுவதோடு, அவற்றைக் கொண்டு ஜூஸ்களை தயாரித்து குடித்து வந்தாலே போதும். இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை செரிமான செயல்முறையை சீராக்குவேதாடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் இழந்த சத்துக்களைப் பெற உதவி புரியும்.

இப்போது கோடையில் சந்திக்கும் உடல் சூடு பிரச்சனையைப் போக்கி, உடலை புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள குடிக்க வேண்டிய சில பழ ஜூஸ்களைக் காண்போம். உங்களுக்கு சூடு பிடித்திருந்தால் இந்த பழ ஜூஸ்களை வாங்கி குடியுங்கள்.
தர்பூசணி ஜூஸ்
கோடையில் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணிப் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதிகம் உள்ளன. எனவே கோடையில் உடல் சூட்டால் கஷ்டப்படும் போது, தர்பூசணியை வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி, அவ்வப்போது தர்பூசணி ஜூஸை தயாரித்தும் குடித்து வாருங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை அனைவருமே அறிவோம். இந்த ஆரஞ்சு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதைத் தவிர, இதில் நீர்ச்சத்தும் இருப்பதால், இதை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதைத் தவிர, அவ்வப்போது ஆரஞ்சு ஜூஸையும் குடித்து வாருங்கள்.
அன்னாசி ஜூஸ்
இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையைக் கொண்ட அன்னாசிப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு பிடிப்பதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அன்னாசியில் குளிர்ச்சி பண்புகளுடன், நீர்ச்சத்துக்களும் உள்ளன. எனவே அன்னாசியை உட்கொள்வதன் மூலம் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடல் சூடும் குறையும். மேலும் அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதி உள்ளது. இது உடலினுள் உள்ள வீக்கம்/காயங்களைக் குறைக்கும்.
மாம்பழ ஜூஸ்
கோடைக்காலம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது மாம்பழமாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட மாம்பழத்தை கோடையில் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கிடைக்கும். அதுவும் இந்த மாம்பழத்தை ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், அது தாகத்தைத் தணிப்பதோடு, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இளநீர்
அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய தாகத்தைத் தணிக்கும் ஒரு பானம் தான் இளநீர். இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த இளநீரைக் கோடையில் குடித்து வந்தால், அது இழந்த எலக்ட்ரோலைட்டுக்களைப் பெற உதவுவதோடு, உடல் சூடு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.
பெர்ரி ஜூஸ்
பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த பெர்ரி பழங்களை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், அது உடல் சூட்டைக் குறைத்து, உடலை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கும். அதுவும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றின் ஜூஸ்களைக் குடித்து வந்தால், கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications