Latest Updates
-
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை!
வயிற்றின் இந்த பகுதியில் வலிக்குதா? அதை சாதாரணமா எடுத்துக்காதீங்க.. இல்ல சிறுநீரகத்தை இழப்பீங்க..
Stomach Pain In Tamil: உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான மற்றும் தினசரி ஆரோக்கிய பிரச்சனையாக வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசம் உள்ளது. இவ்விரண்டும் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொண்டாலோ அல்லது வயிறு நிறைய உணவுகளை உட்கொண்டாலோ சந்திக்க நேரிடும்.
இருப்பினும் ஒருவர் எவ்வித காரணமும் இல்லாமல் வயிற்றுப் பகுதியில் வலியை அல்லது அசௌகரியத்தை சந்தித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அது உடலில் உள்ள தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

வயிற்றுப் பகுதி என்று எடுத்துக் கொண்டால், அதில் வலது பக்க அடிவயிறு, இடது பக்க அடிவயிறு, மேல் வயிறு , அடிவயிற்றின் மையப்பகுதி என்று பல பகுதிகள் அடங்கும். இந்த ஒவ்வொரு பகுதிகளிலும் சந்திக்கும் வலிகளானது, அப்பகுதியில் உள்ள பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
எனவே வயிறு வலி வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து பாருங்கள். இப்போது வயிற்றின் எந்த பகுதியில் வலி ஏற்பட்டால், என்ன அர்த்தம் என்பதைக் காண்போம்.
அடிவயிற்றின் வலது பகுதியில் வலி
ஒருவர் தொடர்ந்து அடிவயிற்றின் வலது பகுதியில் வலியை சந்தித்து வந்தால், அது குடல் அழற்சியின் (Appendicitis) அறிகுறியாகும். அப்பெண்டிக்ஸ் என்பது பெருங்குடலுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய பை ஆகும். இந்த பையில் அழற்சி ஏற்பட்டால், அது வீக்கமடைந்து கடுமையான வலியை ஏற்படுத்தும்.
இந்த குடல் அழற்சியை ஒருவர் கவனித்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். பொதுவாக இந்த வலி தொப்புளில் இருந்து தொடங்கி, சில மணிநேரங்களில் அடிவயிற்றின் வலது பகுதி வரை பரவும்.
குடல் அழற்சியின் அறிகுறிகளாக இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை சந்திப்பதைத் தவிர, குமட்டல், வாந்தி, பசியின்மை, காய்ச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். குடல் அழற்சிக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் தான் சிக்கல்களை போக்க முடியும்.
அடிவயிற்றின் மையப்பகுதியில் வலி
அடிவயிற்றின் மையப்பகுதியில் வலியை சந்திக்கிறீர்களானால், அதற்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) காரணமாக இருக்கலாம். பொதுவாக UTI சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகங்களைப் பாதிக்கும் பொதுவான நோய்த்தொற்றுகளாகும். இந்த UTI தொற்றுகளை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது தீவிரமாகி அப்படியே முன்னேறி சிறுநீரகங்களில் பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.
UTI தொற்று ஏற்பட்டிருந்தால், அடிவயிற்றின் நடுப்பகுதியில் வலியை சந்திப்பதைத் தவிர, சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும். பொதுவாக UTI தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக்குகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
மேல் வலது முதுகு வலி
உங்களுக்கு மேல் வலது முதுகுப் பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா? அப்படியானால் அது தீவிரமான சிறுநீரக தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அது மேல் வலது முதுகு பகுதியில் வலியை ஏற்படுத்துவதோடு, காய்ச்சல், குளிர், உடல் களைப்பு, குழப்பமான மனநிலை போன்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதிக்கு நடுவே வலி
வயிற்றுப் பகுதியின் நடுவில் கடுமையான வலியை சந்தித்தால், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) இருக்க வாய்ப்புள்ளது. IBS என்பது பெருங்குடலை பாதிக்கும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும். இப்பிரச்சனை இருந்தால், அது அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம் மற்றும் குடலியக்கத்தில் மாற்றங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஒருவருக்கு IBS வருவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் மரபணுக்கள், அசாதார தசை சுருக்கங்கள் மற்றும் குடல் பகுதியில் அழற்சி போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கக்கூடும். இந்த பிரச்சனைக்கும் உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மேல் வயிற்று வலி
வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்தால், பித்தப்பை கற்கள் இருக்க வாய்ப்புள்ளது. பித்தப்பை தான கொழுப்புக்களை ஜீரணிக்க தேவையான பித்த நீரை சேமித்து வைக்கிறது. இந்நிலையில் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, அது பித்தக்கற்களை உருவாக்கக்கூடும்.
பித்தக்கற்கள் இருந்தால் மேல் வயிற்று வலியுடன், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். பொதுவாக இந்த பிரச்சனைக்கு மருந்துகளைக் கொண்டு பித்தக்கற்களை கரைக்க முயற்சிப்பார்கள். தீவிர நிலையில் அறுவை சிகிச்சை மூலம் பித்தக்கற்களை மருத்துவர்கள் அகற்றலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications