Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்க முகத்தில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப வயிற்று புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
Symptoms Of Stomach Cancer In Tamil: புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு கொடிய நோயாகும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானோர் புற்றுநோயால் இறக்கிறார்கள்.
இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய். இந்த புற்றுநோயில் புற்றுநோல் செல்கள் வயிற்றின் உட்புறத்தில் வளரத் தொடங்கும். இந்த செல்கள் வளர்ச்சி அடையும் போது, அதை வயிற்றுச் சுவர்களில் ஆழமாக வளரத் தொடங்கும்.

இந்த வயிற்று புற்றுநோய் வயிற்றின் முக்கிய பகுதியுடன், வயிற்றுடன் இணைந்துள்ள உணவுக்குழாயையும் பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்று புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்றால் விவரிக்க முடியாத எடை இழப்பும், வயிற்று வலியும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. மாறாக நன்கு புற்றுநோய் வளர்ந்த பின்னரே தெரியத் தொடங்கும்.
ஆனால் இரைப்பைப் புற்றுநோய் முகத்தில் தோன்றும் பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே முகத்தில் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகள் இரைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. வயிற்று புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை முதன்மை இரைப்பை லிம்போமா, இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி (GIST) மற்றும் வயிற்றில் உள்ள நியூரோஎண்டோகிரைன் (கார்சினாய்டு) கட்டிகள் போன்றவை.
வயிற்று புற்றுநோய் இருந்தால் முகத்தில் தெரியும் அறிகுறிகள்
வயிற்று புற்றுநோய் வளரத் தொடங்கும் போது, அது அப்படியே நிணநீர் மண்டலங்களுக்கு பரவி, சருமத்தில் கட்டிகளை உருவாக்கலாம். மேலும் புற்றுநோயானது மெதுவாக பரவி கல்லீரலை பாதித்து, சருமம் மற்றும் கண்களை மஞ்சளாக வெளிக்காட்டலாம். ஒருவேளை இந்த புற்றுநோய் வயிற்றில் பரவினால், அதன் விளைவான வயிற்றுப் பகுதியில் நீர் தேக்கமடைந்து, வயிற்றை வீங்கச் செய்யும்.
மேலும் இரைப்பை புற்றுநோய் பாப்புலோரித்ரோடெர்மா எனப்படும் அரிய தோல் கோளாறையும் ஏற்படுத்துகிறது. இந்த கோளாறால் முகச் சருமத்தின் தோன் உரிந்து, புடைப்புக்களை ஏற்படுத்தும்.
வயிற்று புற்றுநோயின் பிற அறிகுறிகள்
வயிற்று புற்றுநோய் சரும பிரச்சனைகளைத் தவிர, ஆரம்ப காலத்தில் வேறு பிற அறிகுறிகளையும் வெளிக்காட்டும். அவை, பசியின்மை, திடீர் எடை இழப்பு, அடிவயிற்று வலி மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியம் அல்லது வீக்கம் போன்றவை அடங்கும்.
அதுமட்டுமின்றி, நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம், வாயு தொல்லை, குமட்டல், இரத்தத்துடன் அல்லது இரத்தம் இல்லாத வாந்தி போன்ற அறிகுறிகளையும் சந்திக்கலாம். இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது உணவை உண்டாலே வயிறு நிரம்பிய உணர்வைப் பெறுவார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, வயிற்றுப் புற்றுநோயின் முக்கியமான அறிகுறி, குறைவான ஹீமோகுளோபின் ஆகும்.
வயிற்றில் புற்றுநோய் கட்டி இருந்தால், அதை உணர முடியுமா?
மருத்துவர்களின் கூற்றுப்படி, வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் எவ்வளவு பெரிதாக உள்ளதோ, அதைப் பொறுத்து, ஒருவர் வயிற்றில் உள்ள கட்டியை உணர முடியும். பொதுவாக, வயிற்றில் உள்ள கட்டிகளை உணர்வதென்றல், வயிறு அடிக்கடி வீங்கி, நிறைந்திருப்பது போன்ற உணர்வுடன், மிகுந்த வலியையும் உண்டாக்கும். அதுவும் இந்த வலியானது கட்டிகள் இன்னும் பெரிதாகும் போது தீவிரமாக இருக்கும்.
எது வயிற்று புற்றுநோயை உண்டாக்குகிறது?
இரைப்பை செல்களின் டிஎன்ஏவில் மரபணு மாற்றம் ஏற்படும் போது வயிற்றுப் புற்றுநோய் உருவாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இப்படி மாற்றம் ஏற்படும் போது, செல்கள் வேகமாக வளர்ந்து இறுதியில் இறப்பதற்கு பதிலாக கட்டியை உருவாக்குகின்றன.
இந்த புற்றுநோய் செல்கள் மெதுவாக ஆரோக்கியமான செல்களை அழித்து, அப்படியே உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இப்படியான பிறழ்வுக்கான காரணம் ஏதும் இல்லாவிட்டாலும், குடும்ப வரலாறு, பாக்டீரியா தொற்று, GERD, மது, உடல் பருமன், இரைப்பை அழற்சி மற்றும் புகைபிடித்தல் போன்ற பல காரணிகள் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
புற்றுநோய் எப்படி பரவுகிறது?
மருத்துவர்களின் கூற்றுப்படி, புற்றுநோயானது உடல் திசுக்கள் வழியாக பரவுகிறது. பின் அது சுற்றியுள்ள பகுதிகளில் அப்படியே வளரத் தொடங்குகிறது. மேலும் இது நிணநீர் மண்டலத்திற்குள் நுழைந்து, அப்படியே உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது.
வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், நல்ல சமச்சீரான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, முழு தானியங்களையும் உணவில் சேர்க்க வேண்டும்.
முக்கியமாக மது பானங்கள், தக்காளி சாஸ், தக்காளி கெட்சப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதோடு உப்புள்ள இறைச்சிகள், மீன்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications