Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உங்க உச்சந்தலையில் இந்த அறிகுறிகள் இருந்தா அது ஆபத்தான புற்றுநோயாம்... அலட்சியமா இருக்காதீங்க...!
தோல் புற்றுநோய் என்று வரும்போது, முழு உடலிலும் உள்ள தோலைப் பற்றிதான் நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம், ஆனால் ஒரு முக்கியமான பகுதியை மறந்துவிடுகிறோம், அதுதான் நமது உச்சந்தலை.
ஸ்கால்ப் கேன்சர் என்பது தோல் புற்றுநோயின் குறைவான அறியப்பட்ட வடிவமாகும், இது சரும உச்சந்தலையின் வீரியம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தலையில் ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியைக் குறிக்கிறது.

தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்வீச்சின் வெளிப்பாடு காரணமாக உச்சந்தலையில் புற்றுநோய் ஏற்படலாம். உச்சந்தலையானது பொதுவாக முடியால் மூடப்பட்டிருப்பதால், தோலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவது கடினமாகிறது, இதனால் தோல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினமாகிறது.
மேலும் உச்சசந்தலையில் ஏற்படும் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற பிரச்சினைகள் பொடுகு போன்ற வழக்கமான தினசரி நிகழ்வுகளின் அறிகுறிகளாக அறிகுறிகளை தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உச்சந்தலையில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகளும் புற்றுநோயின் வகையைப் பொறுத்து மாறுபடும்.
நீங்கள் இந்த புற்றுநோய்கள் பற்றி அறிந்திருக்க வேண்டிய சில பொதுவான தகவல்கள் இங்கே உள்ளன, அவற்றை நீங்கள் உங்கள் உடலில் உணர்ந்தால் அதனை புறக்கணிக்காதீர்கள்.
நீண்ட காலமாக ஆறாத புண்
உச்சந்தலையில் ஏற்படும் புண் ஆறாமல் இருப்பது அல்லது மீண்டும் மீண்டும் புண் ஏற்படுவது உச்சந்தலையில் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் உச்சந்தலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து அரிப்பு அல்லது அந்த இடம் மென்மையாக மாறுவது, தீவிரமாக சிகிச்சைக் கொடுத்தும் சரியாகாமல் இருப்பதும் உச்சந்தலையில் புற்றுநோயால் ஏற்படலாம்.
கட்டி, வீக்கம் அல்லது தோலின் ஒழுங்கற்ற இணைப்பு
உச்சந்தலையில் ஒரு புதிய கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டு தொடர்ந்து வளர்வது உச்சந்தலையில் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உச்சந்தலையின் இந்த திட்டுகள் பொதுவாக செதில்களாக, கரடுமுரடான அல்லது சரும மாற்றம், மேலும் நிறம் அல்லது அமைப்பில் மாற்றங்களுடன் தோன்றும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் உச்சந்தலையை ஒரு நிபுணரிடம் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
புண் அல்லது இரத்தப்போக்கு
வெளிப்படையான புண்கள் அல்லது சில வாரங்களுக்குள் குணமடையாத காயங்கள் புற்றுநோயால் ஏற்படலாம். மேலும், உச்சந்தலையில் இருந்து விவரிக்க முடியாத இரத்தப்போக்கு ஒரு ஆபத்தான எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம்.
முடிவளர்ச்சி விகிதத்தில் மாற்றம்
உச்சந்தலையில் முடி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மாற்றம், மெலிந்து போவது அல்லது தொடர்ச்சியான முடி உதிர்தல் போன்றவை புற்றுநோயால் ஏற்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதை புறக்கணிக்காமல், மருத்துவரிடம் சரியான நோயறிதலைப் பெறுவது நல்லது.
விரிவாக்கப்பட்ட நிணநீர் முனைகள்
கழுத்தில் அல்லது உச்சந்தலைப் பகுதியைச் சுற்றி வீங்கிய நிணநீர் முனையங்கள் உச்சந்தலையில் புற்றுநோய் பரவியிருப்பதைக் குறிக்கும். இந்த அறிகுறிகள் புற்றுநோயுடன் தொடர்பில்லாத மற்ற உச்சந்தலை நிலைகளாலும் ஏற்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

