Skin Cancer: உங்க சருமத்தில் திடீரென்று இப்படி வந்துருக்கா? அப்படின்னா அது புற்றுநோயா இருக்கலாம்..

Skin Cancer Symptoms: புற்றுநோய் மிகவும் கொடிய நோய். உலகளவில் பல்வேறு வகையான புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று தான் சரும புற்றுநோய். நிறைய பேருக்கு சரும புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. மற்ற புற்றுநோய்களை விட சரும புற்றுநோயை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

அதற்கு சரும புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அவற்றிற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம், முழுமையாக குணமடைந்துவிட முடியும். சரும புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாகத் தான் தெரியும். இருப்பினும் அவற்றை கவனித்து மருத்துவரை சரியான நேரத்தில் அணுகினால், வெற்றிகரமாக சரிசெய்துவிடலாம். இப்போது சரும புற்றுநோயின் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

Skin Cancer Symptoms Top 6 Warning Signs Of Skin Cancer In Tamil

1. திடீர் மச்சம்

அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜியின் படி, ஒருவரது சருமத்தில் மச்சமானது அளவில் மற்றும் வடிவத்தில் பெரிதாக, வித்தியாசமான நிறத்துடன் காணப்பட்டால், அது சரும புற்றுநோயின் கொடிய வடிவமான மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம். எனவே உங்கள் சருமத்தில் திடீரென்று ஒரு வித்தியாசமான வடிவத்தில், நிறத்தில் மச்சத்தைக் கண்டால், அதை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

2. சருமத்தில் புதிய வளர்ச்சிகள்

30 வயதிற்கு மேல் சருமத்தில் வளர்ச்சிகள் தென்பட்டால், அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, சருமத்தில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் மெலனோமாவுடன் தொடர்புடையது. ஆகவே இப்படியான வளர்ச்சிகளை கண்டால், அதை உடனே கவனியுங்கள்.

3. ஆறாத புண்கள்

உங்கள் சருமத்தில் ஏதேனும் புண்கள் வந்து, அதில் இரத்தக்கசிவு அல்லது மேலோடு உதிர்வது போன்றவை தென்பட்டால், அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இப்படியான புண்கள் சில வாரங்களுக்கும் மேலாக ஆறாமல் இருந்தால், உடனே அதை கவனித்து மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

4. கடுமையான அரிப்பு அல்லது வலியுடனான புண்கள்

சில நேரங்களில் சருமத்தில் ஏற்படும் புண்கள் கடுமையான அரிப்புக்களையும், வலியையும் உண்டாக்கினால், அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் ஆரம்ப கட்டத்தில் இந்த வகை புண்கள் மென்மையாகவும், அரிப்பு மற்றும் வலியுடனும் இருக்கும். எனவே இப்படியான அறிகுறியை சருமத்தில் சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

5. சரும அமைப்பில் மாற்றங்கள்

உங்கள் சருமம் திடீரென்று மென்மையிழந்து கரடுமுரடாக, செதில் செதிலாக வரத் தொடங்கினால், அது சரு-ம புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே சருமத்தின் மேற்பரப்பில் இப்படியான சரும மாற்றங்களைக் கண்டால், உடனே தோல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

6. மச்சத்தைச் சுற்றிய சிவந்திருப்பது

உங்கள் சருமத்தில் திடீரென்று ஒரு மச்சம் வந்து, அது அப்படியே விரிவடைந்து, அதைச் சுற்றி சிவந்தோ அல்லது வீக்கமடைந்தோ காணப்பட்டால், அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, சரும புற்றுநோய் இருந்தால், அவை இரத்தக்கசிவு மற்றும் வலி அல்லது அரிப்புக்களை உண்டாக்கலாம். மேலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதி சிவந்திருக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion