Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த நேரங்களில் தெரியாம கூட செக்ஸ் வைச்சுக்காதீங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வாய்ப்பிருக்கு...!
உடலுறவு என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத மற்றும் ஆரோக்கியமான அம்சமாகும், இதில் போதுமான ஞானத்தைப் பெற்றிருப்பது உங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றும். அதனால்தான் பாலியல் கல்வியின் அவசியத்தை சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாலியல் நெருக்கம் என்று வரும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் என பல விஷயங்கள் உள்ளன, இந்த விதிகளைப் பின்பற்றுவது உங்களுக்கு இனிமையான அனுபவத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற உடலுறவு காரணமாக ஏற்படும் சிக்கல்களின் ஆபத்தையும் குறைக்கும். மருத்துவர்களின் பரிந்துரையின் படி சில தருணங்களில் உடலுறவு கொள்வது உங்களுக்கு சில ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

அந்தரங்க பகுதியில் ஷேவ் செய்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடாது
அந்தரங்க பகுதியில் முடியை அகற்றிய பிறகு உடனடியாக உடலுறவு கொள்வது, வேக்சிங் செயல்முறையின் போது ஏற்கனவே தேய்ந்து போன பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும். அந்தரங்க பகுதியில் வேக்சிங் செய்தபின் ஒரு நாளாவது உடலுறவிற்கு காத்திருக்க வேண்டும்.
குழந்தை பெற்றவுடனேயே உடலுறவு கொள்ளக்கூடாது
குழந்தை பிறந்த பிறகு உடலுறவு கொள்வதற்கு சிறிது காலம் காத்திருப்பது நல்லது. குழந்தை பிறந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரை காத்திருக்குமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், சரியான இடைவெளியை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. பிரசவத்திற்கும், உடலுறவிற்கும் இடையில் இடைவெளி வைத்திருப்பது உங்கள் உடல் பிரசவத்திலிருந்து மீள உதவுகிறது.
UTI சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது உடலுறவு கொள்ளக்கூடாது
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பொதுவாக பெண்களிடம் காணப்படுகின்றன. உங்களுக்கு சமீபத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலோ, உங்களுக்கு தொற்று இல்லை என்று உங்களுக்குத் தோன்றினாலும், இன்னும் சில நாட்களுக்கு உடலுறவை நிறுத்தி வைப்பது நல்லது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்தப் பிறகே உடலுறவு கொள்ள வேண்டும்.
கர்ப்பகால உடலுறவில் கவனம் வேண்டும்
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதில் மருத்துவரீதியாக எந்த தவறும் இல்லை; இந்த காலகட்டத்தில் பல தம்பதிகள் உடலுறவு கொள்கிறார்கள். இருப்பினும், கருப்பை வாய், நஞ்சுக்கொடி, பாலியல்ரீதியாக பரவும் நோய்களின் வரலாறு போன்ற பல காரணிகள் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
காண்டம் இல்லாதபோது உடலுறவு கொள்ளாதீர்கள்
காண்டம் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் உங்களிடம் இல்லையென்றால், உடலுறவு கொள்ளாதீர்கள். ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற உடலுறவின் முக்கிய ஆபத்துகளான பாலியல் பரவும் நோய்களைப் பெறுவதற்கான அபாயத்தைக் குறைப்பதன் மூலமும் அவை உங்களைக் காப்பாற்றுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

