Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
உங்க அந்தரங்க பகுதியில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அங்க பேன் இருக்குமாம்... அது என்ன பண்ணும் தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தை போலவே, உங்கள் அந்தரங்க பகுதியையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். பல்வேறு தொற்றுநோய்கள் மட்டுமல்லாது, பேன்களும் உங்கள் அந்தரங்க பகுதியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்தரங்க பேன்கள், நண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
அவை உடலின் முடிகளில், குறிப்பாக ஆண்குறி அல்லது யோனியைச் சுற்றியுள்ள அந்தரங்க முடிகளில் வாழக்கூடிய சிறிய பூச்சிகள். நெருங்கிய உடல் தொடர்பு மற்றும் உடலுறவு மூலம் அந்தரங்க பேன் பரவுகிறது. இது முடியை பாதிக்காது. நீங்கள் அந்தரங்க பேன்களால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள் மற்றும் அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அந்தரங்க பேன்களை எவ்வாறு கண்டறிவது
அந்தரங்க பேன்கள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். 2 மிமீ நீளம் மற்றும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தரங்க பேனை, கண்டறிவது மிக கடினமாக இருக்கும். ஆனால், அவற்றை சில சமயங்களில் உங்கள் அந்தரங்க முடியில் பார்க்கலாம்.
அந்தரங்க பேன்கள் பெரும்பாலும் ஆண்குறி அல்லது யோனியைச் சுற்றியுள்ள அந்தரங்க முடியில் வாழ்கின்றன. இருப்பினும், அவை மார்பு, அக்குள், முகம் மற்றும் கண் இமைகளில் உள்ள முடிகளிலும் சில சமயம் காணப்படலாம். ஆனால், பேன்கள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அந்தரங்க பேன் இருப்பதற்கான அறிகுறிகள்
தேசிய சுகாதார சேவை, உங்களுக்கு அந்தரங்க பேன் இருப்பதற்கான சில அறிகுறிகளைப் பற்றி கூறுகிறது. அந்தரங்க பேன் இருந்தால், உங்களுக்கு முதலில் அந்தரங்கப்பகுதியில் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு பொதுவாக இரவில் மோசமடையலாம். உங்கள் தோலில் சிறிய சிவப்பு அல்லது நீல புள்ளிகள் இருந்தால், அவை அந்தரங்க பேன் கடித்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
உங்கள் தலைமுடியில் அல்லது அந்தரங்க முடியில் வெள்ளை அல்லது மஞ்சள் போன்ற புள்ளிகளை கண்டால், அவை பேன் முட்டைகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், உங்கள் உள்ளாடைகளில் அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் இருப்பதும் பேன் இருப்பதற்கான அறிகுறியாகும்.
அந்தரங்க பேன்களுக்கான சிகிச்சை
அந்தரங்க பேன் பிரச்சனையை தீர்க்க சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. பேன்களைக் போக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து கிரீம்கள் அல்லது ஷாம்புகளைப் பயன்படுத்துவது முக்கிய சிகிச்சைகள். இவற்றை மிக கவனமாக செய்ய வேண்டும்.
தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, நீங்கள் வழக்கமாக உங்கள் முழு உடலிலும் சிகிச்சையைப் பயன்படுத்த வேண்டும். பின்னர், சில மணிநேரங்களுக்கு பின் குளிக்க வேண்டும். அனைத்து பேன்களும் அழிக்கப்பட்டதை உறுதிசெய்ய, ஒரு வாரம் கழித்து இதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். சிகிச்சையை எவ்வாறு அணுகுவது என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது.
அந்தரங்க பேன் பரவுவதை எப்படி நிறுத்துவது?
நீங்கள் அந்தரங்கப் பேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சிகிச்சையைப் பெறுவது மற்றும் அது வேறு யாருக்கும் பரவாமல் தடுப்பதற்கும், பேன் மீண்டும் வருவதைத் தடுப்பதற்கும் தகுந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் துணிகளையும் படுக்கைகளையும் சூடான நீர் சலவையில் (50C அல்லது அதற்கு மேல்) துவைக்க வேண்டும். உலர் சுத்தம் செய்யவும் அல்லது உங்கள் துணிகளில் இருக்கும் பேன்களைக் கொல்ல குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். மேலும், பேன்களை அகற்ற உங்கள் மெத்தையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
உங்களுக்கு அந்தரங்க பேன் பிரச்சனை இருந்தால், உங்கள் உடைகள், படுக்கை அல்லது சுகாதாரப் பொருட்களை (ரேஸர்கள் போன்றவை) வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது உங்களிடம் இருந்து அவர்களுக்கு பரவலாம். அதேபோல உங்கள் சிகிச்சையின் போது உடலுறவு உட்பட நெருங்கிய உடல் தொடர்பில் ஈடுபடாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

