Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ரித்திகா சிங் பிறந்தநாள்.. கிக் பாக்ஸிங் டூ சினிமா நடிகை.. மேடத்துடைய ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தொடர்ந்து நடித்து கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அடிப்படையில் கிக் பாக்ஸிங் மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்றிருக்கும் ரித்திகா தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் ரொம்பவே கவனமாக இருப்பவர். இந்நிலையில் அவரது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்து பார்க்கலாம்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ரித்திகா சிங் தமிழில் இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமின்றி அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை அவர் வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. கண்டிப்பாக கோலிவுட்டில் ரித்திகா சிங் பெரிய ரவுண்டு வருவார் என்று திரைத்துறையினரால் கணிக்கப்பட்டது.

தமிழில் பிஸியான நடிகை: அதற்கேற்றபடிதான் அவரது லைன் அப்பும் இருந்தது. அவர் நடித்த ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் வழக்கமான படமாக இல்லாமல் கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்த அவருக்கு ரஜினியுடன் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் காவல் துறை அதிகாரியாக தோன்றி அசத்தியிருந்தார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகிவரும் அவர்; தன்னுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பவர். ஏற்கனவே அவர் கிக் பாக்ஸிங் மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸை கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒர்க் அவுட் வீடியோ: ஃபிட்னெஸில் கவனமாக இருப்பதோடு மட்டுமின்றி தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடார்ந்து பதிவேற்றுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். இன்று அவர் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்துக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சியை செய்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஃபிட்னெஸ் ரகசியம்: தினமும் அவர் தவறாமல் மொத்தம் எட்டு உடற்பயிற்சிகளை செய்வாராம். ஒவ்வொன்றையும் அவர் 20 நொடிகள் இடைவிடாமல் படு வேகமாக மேற்கொள்கிறார். அதாவது முதலில் வேகமாக நின்ற இடத்திலிருந்தே 20 நொடிகள் கேப் விடாமல் குதிப்பாராம். அடுத்ததாக நின்ற இடத்திலிருந்தே 20 நொடிகள் ஓடுவாராம். மூன்றாவதாக Squat எனப்படும் கால்கள், தொடைகள், இடுப்பு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சியை செய்வாராம். அதனை நாற்காலியில் அமர்வது மாதிரி அமர்ந்து எழுந்து செய்ய வேண்டும்.
அதனையடுத்து புஷ் அப், பஞ்ச்சிங், கிக்ஸ் ஆகியவைகளை செய்வாராம். அதனைத் தொடர்ந்து தரையில் படுத்துக்கொண்டு கைகளை தலையின் பின்னால் வைத்துக்கொண்டு முழங்கால்களை மடக்கும் க்ரஞ்ச்சஸை (Crunches) செய்வாராம். இதன் மூலம் வயிற்று கொழுப்பு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனை முடித்துவிட்டு முழங்கைகள் மற்றும் பாதங்களை தரையில் வைத்து உடலை தூக்கும் உடற்பயிற்சியான பிளாங்க் (Plank) செய்வாராம். அதன் மூலம் வயிற்று தசைகள் வலுவடைந்து கொழுப்புக்கள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் செய்யும் நேரம் என்று பார்த்தால் மொத்தம் 2 நிமிடங்கள் 40 நொடிகள் வரும். உடற்பயிற்சி செய்ய ஆசைதான் ஆனால் நேரம் இல்லையே என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ரித்திகா சிங்கின் இந்த ஃபிட்னெஸ் சீக்ரெட் பயனுள்ளதாக அமையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications