Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட் யூஸ் பண்றீங்களா? உடனே நிறுத்துங்க.. இல்ல இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..
Teeth Whitening Toothpaste Side Effects: யாருக்கு தான் வெள்ளையான பற்களைப் பெற ஆசை இருக்காது. நல்ல வெண்மையான பற்கள் ஒருவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டுவதோடு, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். ஆனால் தற்போதைய மோசமான மற்றும் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களால் பற்கள் அதன் வெண்மையான நிறத்தை இழந்து, அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
இப்படி நிறம் மாறி இருக்கும் பற்களை வெண்மையாக்குவதற்கு சந்தைகளில் ஏராளமான பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இப்படியான டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்க தெரிவிக்கின்றனர்.

இந்த வகையான டூத் பேஸ்ட்டுகள் ஆரம்பத்தில் பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளைப் போக்குவதோடு எனாமலையும் கரைக்கும். ஆனால் இந்த டூத் பேஸ்ட்டை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, அது பற்களின் எனாமலைக் குறைத்து, மெலிதாக்கி, ஒரு கட்டத்தில் பற்களை மஞ்சளாக்கிவதோடு, மிகவும் சென்சிடிவ்வாக்கிவிடும்.
ஏன் பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்டுகள் பற்களுக்கு நல்லதல்ல?
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்டுகளில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் கார்பமைடு பெராக்ஸைடு போன்றவை இருக்கும். இவை பற்களில் உள்ள கறைகளை நீக்க உதவும் ஆனால் தொடர்ச்சியாக பய்னபடுத்தும் போது, அது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் பற்களின் எனாமலை சேதப்படுத்தும்.
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்டுகள் எவ்வாறு செயல்படுகிறது?
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகள் பற்களில் ஏற்படும் கறைகளைப் போக்குகின்றன. பற்களானது கடினமான எனாமலைக் கொண்டுள்ளது. இந்த எனாமலில் படியும் கறைகளைப் போக்க பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட்டுகளில் பெரும்பாலும் நீரேற்றப்பட்ட சிலிகா, கரி மற்றும் பேக்கிங் சோடா இருக்கும். இது தவிர ஆண்டிடிபோசிஷன் ஏஜெண்ட்டுகள், ப்ளீச்சிங் ஏஜெண்ட்டுகள், பற்களை வெண்மையாக்கும் வண்ணங்கள் அல்லது சாயங்கள், சர்பாக்டான்ட்கள் போன்றவைகளும் இருக்கலாம்.
அதுவும் அதிக செறிவு கொண்ட ஹைட்ரஜன் பெராக்ஸைடு நிறைந்த டூத் பேஸ்ட்டை பயன்படுத்தினால், அது பற்கள் மற்றும் ஈறுகளில் மீள முடியாத அளவில் சேதத்தை ஏற்படுத்தும். பொதுவாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்ட்டாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.
பழங்காலம் முதலாக பற்களை வெண்மையாக்குவதற்கு இயற்கையான மூலப்பொருளாக கரியைப் பயன்படுத்தி வருகினறனர். இருப்பினும், கரி ஒரு சொரசொரப்பான மேற்பரப்பைக் கொண்டதால், இது பற்களை மஞ்சளாக்குவதோடு, சென்சிடிவ்வாக்குகிறது. ஆரம்பத்தில் இது நல்ல பலனைத் தருவதாக தெரிந்தாலும், தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் போது, பற்களின் எனாமல் கரைந்து, பற்கள் மஞ்சளாகத் தெரியத் தொடங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பற்களை வெண்மையாக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் சந்திக்கும் பக்கவிளைவுகள்
ஈறுகள் மற்றும் பற்களில் எரிச்சல்
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட் மற்றும் பிற பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, அது ஈறுகளில் எரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் இதில் பெராக்ஸைடு அதிகம் உள்ளது. இது ஈறுகளில் உள்ள திசுக்களில் காயங்கள் மற்றும் புண்கள் ஏற்பட வைக்கும்.
பற்களின் எனாமலில் சேதம்
பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்டுகளில் உள்ள கனிமச்சத்துக்கள் பற்களின் எனாமலை சேதப்படுத்துவதோடு, அதில் உள்ள கனிமச்சத்துக்கள் கடினமாகி, ஒரு வாரத்திற்குள் பற்களை அரிக்கத் தொடங்கிவிடும்.
பற்களை வெண்மையாக்கும் சில சிறந்த வழிகள்
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்க விரும்பினால், பின்வருவனவற்றை மேற்கொள்ளுங்கள். அவை:
* பல் மருத்துவரை அணுகி பற்களை வெண்மையாக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
* பற்களில் வெண்மையாக்கும் ஜெல்களைத் தடவலாம்.
* வெண்மையாக்கும் ஸ்ட்ரப்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications