Latest Updates
-
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும்
Ratan Tata Death: ரத்தன் டாடாவின் மரணத்திற்கு உண்மையில் என்ன காரணம்-ன்னு தெரியுமா?
Ratan Tata Death: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஜாம்பவானான் தான் ரத்தன் டாடா. இவர் 100-க்கும் அதிகமான நாடுகளில் 30-க்கும் அதிகமாக நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டவர். 86 வயதான ரத்தன் டாடா சமீபத்தில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். ரத்தன் டாடாவின் மரணம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரத்தன் டாடா இறப்பதற்கு முன் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரத்தன் டாடா அதை நிராகரிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு இடுகையை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: "நான் எனது வயது தொடர்பான மருத்துவ நிலைமைகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளேன். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் நன்றாவே இருக்கிறேன். எனவே எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்புவரதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்."

இருப்பினும் திடீரென்று ரத்தன் டாடா காலமானார். இதற்கு வயது மற்றும் அது தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகளால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது வயதாகும் போது இரத்த அழுத்தம் ஏன் குறைகிறது என்பதையும், திடீரென்று இரத்த அழுத்தம் குறையும் போது உடலில் என்ன நடக்கும் என்பதையும் காண்போம்.
வயதானவர்களுக்கு ஏன் திடீரென்று இரத்த அழுத்தம் குறைகிறது?
குறைந்த இரத்த அழுத்தத்தை ஹைப்போடென்சன் என்று அழைப்பர். இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஒருவரது இரத்த அழுத்தம் மிகவும் குறைந்தால், அதன் விளைவாக உயிரையே இழக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இந்த நிலையை சைலண்ட் கில்லர் என்றும் அழைப்பர். இதன் அறிகுறிகளை கவனித்து, அதற்கு உடனே சிகிச்சையே மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட நேரிடும்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது, நமது உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, அதன் விளைவாக இரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி வயதான காலத்தில் எடுக்கும் மருந்துகள், நீரிழப்பால் இரத்தத்தின் அடர்த்தி குறைந்து, அதன் காரணமாக குறைந்த இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கிறது.
உடலில் இரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தால் என்ன நடக்கும்?
ரத்தன் டாடாவின் மரணத்திற்கு குறைந்த இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், ஒருவரது உடலில் இரத்த அழுத்தம் குறைந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது காண்போம்.
உயர் இரத்த அழுத்தம் போன்றே குறைந்த இரத்த அழுத்தமும் உயிருக்கு ஆபத்தானது. அதுவும் இதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், உயிரையே இழக்க நேரிடும். உடலில் இரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியும். அவையாவன:
* தலைச்சுற்றல்
* மயக்கம்
* மங்கலான பார்வை
* குழப்பம்
* குமட்டல் அல்லது வாந்தி
* பலவீனம் அல்லது சோர்வு
நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்தால், அதன் விளைவாக மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்றவற்றிற்கு வழிவகுத்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











