Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! அடிக்கடி காலின் இந்த இடத்தில் வலிக்குதா? அப்ப புரோஸ்டேட் புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Prostate Cancer Symptoms In Tamil: உலகளவில் உயிரைப் பறிக்கும் கொடிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் உருவாகும் கட்டிகளாகும். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. அதில் ஆண்களை மட்டுமே தாக்கக்கூடிய புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோய்.
இந்த புரோஸ்டேட் புற்றுநோயால் அமெரிக்காவில் ஏராளமான ஆண்கள் பாதிகப்படுவதாக கூறப்படுகிறது. இந்த வகையான புற்றுநோய் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகிறது. புரோஸ்டேட் சுரப்பியானது மிகவும் சிறிய உறுப்பு. இது வால்நட் வடிவத்தில் இருக்கும். இந்த சுரப்பி இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இந்த சுரப்பி தான் ஆண்களின் உடலில் விந்துவை உருவாக்க உதவுகிறது. இந்த புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்கு கீழே அமைந்துள்ளது. இது வயதிற்கு ஏற்ப பொதுவாக வளரும்.

இந்த புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், எளிதில் சிகிச்சை அளித்து திறம்பட கையாளலாம். சரி, புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்று நீங்கள் கேட்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், அதன் அறிகுறி ஆண்களின் கால்கள் மற்றும் பாதங்களிலேயே தெரியும். கீழே அந்த அறிகுறிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளன.
கால்களில் அசாதாரண வீக்கம்
கால்களில் வீக்கம் ஏற்படுவதை மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைப்பர். ஆண்கள் காரணமின்றி தங்கள் கால்களில் வீக்கத்தை சந்தித்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியால் இடுப்பு பகுதியில் உள்ள நிணநீர் கணுக்கள் அல்லது இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பட்டு, அதன் விளைவாக கால்களில் திரவம் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
கால்களில் வலி மற்றும் அசௌகரியம்
புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கால்களில் மிகுந்த அசௌகரியத்தை சந்திப்பார்கள். குறிப்பாக இடுப்புப் பகுதியில் இருந்து அந்த வலியை உணர்வதோடு, காலப்போக்கில் அது மோசமடையும். இந்த வலியால் அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
பலவீனமான கால்கள் அல்லது கால் மரத்துப்போவது
கால்களின் செயல்பபாட்டைக் கட்டுப்படுத்தும நரம்புகளானது புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் போது, அடிக்கடி கால்கள் வலுவிழந்து இருப்பதை உணரலாம் அல்லது கால் மரத்துப்போவதை சந்திக்கலாம். எனவே இந்த அறிகுறியை ஆண்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
நிற்க அல்லது நடக்க முடியாமை
புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால், அந்த ஆண்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ மிகவும் சிரமப்படுவார்கள். ஏனெனில் முற்றிய நிலையில் இந்த புற்றுநோய் இடுப்பு எலும்புகளுக்கு பரவி, நேரடியாக இயக்கம் மற்றும் சமநிலையை பாதிக்கிறது.
கால் எலும்பில் வலி
ஆண்கள் கால் எலும்புகளில் வலியை சந்தித்தால், குறிப்பாக இடுப்பு, தொடை அல்லது கீழ் முதுகில் வலியை அனுபவித்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் முற்றிய நிலையின் அறிகுறியாகும். ஏனெனில் வீரியமிக்க கட்டிகளானது அப்படியே எலும்புகளுக்கு பரவியிருப்பதால், கால் பகுதிகளில் லேசான இயக்கம் இருந்தாலே மிகுந்த வலியை அனுபவிக்க நேரிடுகிறது.
வீங்கிய மற்றும் வலிமிக்க கால் மூட்டுகள்
கால் மூட்டுகளில் கடுமையான வலியை சந்தித்தாலோ அல்லது வீக்கத்தை சந்தித்தாலோ, புரோஸ்டேட் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. எனவே திடீரென்று உங்கள் கால் மூட்டுக்களில் வலியுடன் வீக்கத்தை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
கால்களில் சரும நிற மாற்றம்
கால்களின் சருமமானது வழக்கத்திற்கு மாறாக சிவந்தோ, மிகவும் சூடாகவோ அல்லது சொறி போன்ற தோற்றத்திலோ காணப்பட்டால், புரோஸ்டேட் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இது பெரும்பாலும் புற்றுநோயால் தூண்டப்பட்ட வீக்கம் அல்லது இரத்த ஓட்ட பிரச்சனையினால் ஏற்படலாம்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஆண்கள் திடீரென்று சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, அவரிடம் இந்த அறிகுறிகளை தெரிவித்து, பரிசோதனை செய்து பாருங்கள். ஆரம்பத்திலேயே எந்த வகையான புற்றுநோயையும் கண்டறிந்தால், சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும் மற்றும் குணமடையவும் வாய்ப்புக்கள் உள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications