நைட் 10 மணிக்கு மேல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க நுரையீரல் ஆபத்தான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...

Pneumonia Symptoms In Tamil: இன்று நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நிமோனியாவால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிமோனியா என்பது ஒரு தீவிரமான நுரையீரல் அழற்சி நிலையாகும். அதுவும் இது நுரையீரலில் உள்ள சிறிய காற்று பைகளில் ஏற்படும் தொற்றாகும். இந்த தொற்று பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படலாம்.

Pneumonia Symptoms Warning Signs of Severe Lung Infection That Appear After 10PM

இதில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்னும் பாக்டீரியா தான் அடிக்கடி நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இது தவிர ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற பாக்டீரியாக்களும் இத்தொற்றை ஏற்படுத்தலாம். இதில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றிற்கு ஆன்டிபாக்டீரியல் வழங்கி சிகிச்சை அளிக்கலாம்.

அதேப் போல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மூலம் தூண்டப்படுவது வைரல் நிமோனியா ஆகும். மேலும் பூஞ்சையால் ஏற்படக்கூடிய நிமோனியா மிகவும் குறைவாகவே காணப்பட்டாலும், இந்த வகை நிமோனியா சமரசம் செய்யப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கே ஏற்படும்.

நிமோனியா தொற்று ஒருவருக்கு தீவிரமானால், அதன் விளைவாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே நிமோனியா இருப்பதை ஒருவர் ஆரம்பத்திலேயே அறிந்து, அதற்கு முறையான சிகிச்சையை உடனே மேற்கொள்ள வேண்டும். கீழே நிமோனியா இருந்தால் இரவு நேரத்தில் ஒருவரிடம் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.

தொடர்ச்சியான இருமல்

நிமோனியா இருந்தால் தெரியக்கூடிய முதல் அறிகுறி தொடர்ச்சியான இருமல். அதுவும் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக தொடங்கி, பின் ஒவ்வொரு முறை இருமும் போதும் சளி வெளியேறத் தொடங்கும். குறிப்பாக இந்த இருமல் இரவு நேரத்தில் தீவிரமாக, இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் இருக்கும் மற்றும் மிகுந்த உடல் சோர்வையும் உண்டாக்கும். அதுவும் இருமலின் போது ஒருவித சப்தம் கேட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சுவாசிப்பதில் சிரமம்

நிமோனியாவின் மற்றொரு முக்கிய அறிகுறி சுவாசிப்பதில் சிரமத்தை சந்திப்பது ஆகும். அதுவும் இரவு நேரத்தில் படுக்கும் போது இந்த உணர்வு இன்னும் தீவிரமாக இருக்கும். சில சமயங்களில் லேசான வேலைகளை செய்யும் போதும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே இப்படி இரவு நேரத்தில் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்தித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பாருங்கள்.

நெஞ்சு வலி

பொதுவாக நெஞ்சு வலி மாரடைப்பின் அறிகுறியாக கருதப்பட்டாலும், நிமோனியாவுடனும் இது தொடர்பு கொண்டுள்ளது. அதுவும் இருமல் அல்லது சுவாசிக்கும் போது சிரமத்தை சந்தித்து, அத்துடன் லேசான நெஞ்சு வலியை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக நெஞ்சு வலியுடன், வேகமான இதயத் துடிப்பு அல்லது வியர்வையை சந்தித்தால், அது நுரையீரலில் ஏற்பட்டுள்ள தீவிரமான நோய்த்தொற்றைக் குறிக்கிறது. எனவே கவனமாக இருங்கள்.

திடீர் காய்ச்சல் மற்றும் குளிர்

திடீரென்று காய்ச்சல் மற்றும் குளிரை சந்தித்தால், அது நிமோனியாவின் பொதுவான அறிகுறிகளாகும். அதுவும் இரவு நேரத்தில் தூக்கத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிகுறிகள் தெரியும். சிறிது நேரம் கடுமையாக காய்ச்சல் அடித்து, திடீரென்று அதிகமக வியர்த்து, உடல் மிகுந்த அசௌகரியதுடன் இருந்தால், உடலில் ஏதோ தீவிரமான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவும் காய்ச்சலுக்கு மாத்திரை போட்டும் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் சோர்வு மற்றும் பலவீனம்

பெரும்பாலானோரால் புறக்கப்படும் நிமோனியாவின் மற்றொரு அறிகுறி தான் உடல் சோர்வு மற்றும் பலவீனம். உடலானது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதால், இப்படி மிகுதியான உடல் சோர்வை சந்திக்கலாம். அதுவும் இந்த உடல் சோர்வு இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். குறிப்பாக எந்த வேலைகளையும் செய்ய முடியாத அளவில் உடல் பலவீனமாக இருக்கும். எனவே போதுமான ஓய்வை எடுத்தும், இப்படி உடல் சோர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுடுத்துக் கொள்ளாமல், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion