Latest Updates
-
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
எச்சரிக்கை! உங்க நாக்கில் இப்படி இருந்தா, அதை சாதாரணமா எடுத்துக்காதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
Oral Health: நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. அதனால் தான் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்தால், அது பல்வேறு அறிகுறிகளை வெளிபடுத்துகின்றன. முக்கியமாக ஒருவரது ஆரோக்கியத்தை வாயைக் கொண்டே அறியலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக நாக்கைக் கொண்டு உடலினுள் உள்ள பல பிரச்சனைகளை அறியலாம். என்ன தான் நாக்கு உணவின் சுவையை உணர பயன்பட்டாலும், இது உடலில் உள்ள பல பிரச்சனைகளை சுட்டிக்காட்ட உதவுகின்றன.

ஒரு நாக்கில் சுமார் 2,000 முதல் 4,000 வரையிலான சுவை மொட்டுகள் உள்ளன. மேலும் நாக்கு 8 வெவ்வேறு வகையான தசைகளால் ஆனது. எனவே தான் நாக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் முக்கிய குறிகாட்டியாக உள்ளன. இப்படிப்பட்ட நாக்கை தினமும் வாயை சுத்தம் செய்யும் போது தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
அப்படி நாக்கை சுத்தம் செய்யும் போது, ஒவ்வொரு நாளும் நாம் நமது நாக்கின் தோற்றத்தைக் கவனிக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்களை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாக்கில் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதை புறக்கணிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
வெள்ளை திட்டுகள்
உங்கள் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக வெள்ளை படலத்துடன் இருந்தால், அது பாக்டீரியா, ஜங்க் உணவுகள் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தினால் இருக்கலாம். இப்படியான வெள்ளை திட்டுகள் பூஞ்சை தொற்றின் அறிகுறியாகும். இப்படியான பூஞ்சை தொற்றினை லுகோபிளாக்கியா என்று அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை திட்டுக்களை கவனித்து சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது வாய் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
நாக்கில் முடி
நாக்கின் மேற்பரப்பில் மிகச்சிறிய முடி அல்லது ரோமங்கள் நன்கு கண்களுக்கு தெரிகிறதா? நிபுணர்களின் கூற்றுப்படி இது 13 சதவீத மக்கள் தொகையில் ஒப்பீட்டளவில் ஒரு பொதுவான நிலை. இது புரோட்டீன்கள் நாக்கில் கட்டிகள் மற்றும் புடைப்புக்களை சற்று நீளமாக மாற்றுவதால் ஏற்படுகிறது. இந்த சிறிய ரோமங்கள் உணவு மற்றும் பாக்டீரியாக்களை ஈர்க்கின்றன. இப்படி நாக்கில் ரோமங்களின் வளர்ச்சியானது எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பெரும்பாலும் வயதானவர்களிடையே காணப்படுகிறது.
நாக்கு எரிச்சல்
நல்ல சூடான பானங்களைக் குடிக்கும் போது, அது நாக்கில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். அதோடு ஒருவித மெட்டாலிக் சுவையையும் உணர வைக்கும். இப்படியான மாற்றத்தை நீங்கள் உங்கள் நாக்கில் அனுபவித்தால், அது நரம்பு தொடர்பான அல்லது அதிகப்படியான அமில சுரப்பின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாக்கில் புடைப்புகள்
உங்கள் நாக்கில் ஆங்காங்கு புடைப்புக்கள் காணப்படுகிறதா? அப்படியானால் அது நாக்கின் பாப்பிலாவின் தற்காலிக அழற்சியாகும். புளிப்பு மிட்டாய் அல்லது அதிக அமிலம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அவை நாக்கு, ஈறுகள் மற்றும் உதடுகளில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, புடைப்புக்களை அல்லது புண்களை ஏற்படுத்திவிடும். மேலும் அவை வலியையும் உண்டாக்கும். அதே சமயம் அதுதானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிபிலிஸ்
சிபிலிஸ் என்பது ஆபத்தான ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது பிறப்புறுப்பு, ஆசன அல்லது வாய் வழி உடலுறவின் போது நேரடியாக சிபிலிஸ் புண்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த தொற்றின் ஆரம்ப கால அறிகுறி நாக்கில் ஏற்படும் புண் தான். எனவே நாக்கில் புண் வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
புற்றுநோய்
நாக்கின் மேற்பரப்பில் சிறுசிறு கட்டிகள் தென்படுவது புற்றுநோயினால் கூட இருக்கலாம். அதுவும் நாக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இந்த கட்டிகள் வலிகளின்றி, கடினமாக இருந்தால், அது புற்றுநோய் கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் நாக்கில் இப்படியான கட்டிகள் இருந்தால், அதை உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.
நாக்கில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் வழிகள்
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பல்வேறு மருத்துவ நிலைமைகள் பலவீனமடையச் செய்து, கட்டிகள் மற்றும் பிற அறிகுறிகளை உண்டாக்கலாம். எனவே உடலின் எந்த ஒரு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மாற்றத்தைக் கண்டால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
சரியான சிகிச்சைகளை சரியான நேரத்தை எடுத்து வந்தால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். கீழே வாயில் அல்லது நாக்கில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* அமிலம் மற்றும் காரம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்
* தண்ணீரை அதிகம் குடிக்கவும்
* வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாயை தினமும் இருமுறை கொப்பளிக்கவும்
* வாயில் கட்டிகள் இருந்தால் ஆல்கஹால் நிறைந்த மௌத் வாஷ்களை தவிர்க்ககவும்.
* நல்ல வாய் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











