Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கோவிட் - இது ஆபத்தானதா? இதன் அறிகுறிகள் என்னென்ன?
New Covid-19 Variant FLiRT: 2019 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றி 2 வருடங்கள் ஒட்டுமொத்த உலகையே மிரள வைத்த ஒரு கொடிய வைரஸ் தான் கொரோனா வைரஸ். இந்த வகை வைரஸ் இதுவரை பலவாறு உருமாற்றங்கள் அடைந்து, ஏராளமான உயிர்களை பறித்துள்ளன.
இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து, ஒரு வழியாக தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டனர். அதோடு முடிந்த வரை அனைத்து நாடுகளும் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் போட்டு, ஒரு வழியாக கட்டுப்படுத்திவிட்டது.

என்ன தான் இந்த கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்று வரை அது உருமாற்றமடைந்து, உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் பரவி வருகின்றன. முக்கியமாக பருவகாலம் மாறும் போது வைரஸ் உருமாற்றமடைந்து, மக்களிடையே வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்காவில் ஓமிக்ரானின் JN.1 வம்சாவளியைச் சேர்ந்த FLiRT வேகமாக பரவி வருகிறது.
முக்கியமாக இந்த வகை மாறுபாடு அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் கொரியா போன்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இப்படி பரவுவதைப் பார்க்கும் போது, எங்கு கோடையில் இது ஒரு புதிய அலையை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு இந்த வகை முந்தைய ஓமிக்ரான் வகையைக் காட்டிலும் அதிகம் தொற்றக்கூடியதாக கருதப்படுகின்றன.
என்ன தான் கொரோனா வைரஸில் பிறழ்வுகள் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த புதிய வகை மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய கோவிட்-19 மாறுபாட்டிற்கு FLiRT என்ற பெயர் எப்படி வந்தது?
FLiRT என்ற பெயரானது வைரஸின் பிறழ்வுகளுக்கான தொழில்நுட்ப பெயர்களை அடிப்படையாக கொண்டது. அதில் ஒன்று F மற்றும் L ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கியது. மற்றொன்று R மற்றும் T எழுத்துக்களை உள்ளடக்கியது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் படி, கடந்த 2 வாரங்களில் அமெரிக்கா முழுவதும் 25 சதவீத புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் KP.2 மாறுபாட்டிலிருந்து வந்தவை. இருப்பினும், இந்த வகை மாறுபாடு நாடு முழுவதும் இன்னும் முழுமையாக பரவவில்லை.
கோவிட் FLiRT மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?
நிபுணர்களின் கூற்றுப்படி FLiRT மாறுபாடு இதுவரை பரவிய மாறுபாடுகளைப் போன்றே வேகமாக தொற்றக்கூடியதா மற்றும் ஆபத்தானதா என்பதை அறியும் முயற்சிகள் இன்னும் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. WebMD-ன் கூற்றுப்படி, இந்த வகை மாறுபாட்டின் ஸ்பைக் புரதத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இது மற்ற வகை மாறுபாட்டைப் போலவே மக்களை வேகமாக தாக்கி, அவர்களின் நிலைமையை மோசமடையச் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
அதுவும் அமெரிக்காவில் வயது வந்தவர்களில் 22 சதவீதம் மக்கள் சமீபத்தில் கோவிட் தடுப்பூசியை பெற்றுள்ளதால், அவர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் சமீபத்தில் பூஸ்டர் ஊசியைப் பெற்றவர்கள் கூட இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவிட் FLiRT மாறுபாட்டின் அறிகுறிகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, FLiRT மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும், கோவிட்-19-ன் பிற மாறுபாடுகளின் அறிகுறிகளையே ஒத்திருக்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* காய்ச்சல்
* வாசனை மற்றும் சுவை இழப்பு
* உடல் வலி
* தொண்டை வலி
* நெஞ்சு நெரிசல்
* மூக்கு ஒழுகல்
* வாந்தி
* இருமல்
* மூச்சுத்திணறல்
* உடல் சோர்வு
* செரிமான பிரச்சனைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், இந்த வகை மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதிபடுத்த ஒரு குறிப்பிட்ட மரபணு சோதனை செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இது பரவ வாய்ப்புள்ளதா?
இந்த புதிய வகை மாறுபாடு இதுவரை பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு மோசமாக பாதிக்கவில்லை மற்றும் தற்போது வரை இது சிறிய அளவில் தான் பரவத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மாறுபாட்டினால் இறப்பு விகிதமும் பதிவாகவில்லை. எனவே இந்தியாவில் இந்த வைரஸ் தற்போது பரவ வாய்ப்பு குறைவு தான்.
இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதோடு, ஒவ்வொரு பருவகாலத்திலும் உருமாற்றமடைவதால், எந்த ஒரு வைரஸும் தாக்காமல் இருக்க ஒருசில விஷயங்களை பின்பற்றினால் போதும். அவை:
* தடுப்பூசிகளைப் போடுவது
* ஆரோக்கியம் சரியில்லாத போது வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருப்பது
* பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க்குகளை அணிந்து செல்வது
* இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் கூட்டமான இடங்களுக்க செல்வதைத் தவிர்ப்பது.
* முக்கியமாக கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது.
இந்த விஷயங்களை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், எந்த ஒரு வைரஸும் தாக்காமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications